752 ரன்ஸ் அடிச்சாலும் கருண் நாயருக்கு சாம்பியன்ஸ் ட்ராபியில் சான்ஸ் கிடைக்காது.. காரணம் இது தான்.. டிகே வெளிப்படை

Dinesh Karthik
- Advertisement -

இந்தியாவில் 2024 – 25 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் 33 வயதாகும் கருண் நாயர் இதுவரை 752 ரன்களை 752 என்ற மிரட்டலான சராசரியில் குவித்துள்ளார். குறிப்பாக இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 முறை அவுட்டாகாமல் வியப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன் வாயிலாக இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக அவர் தேர்வாளர்களின் கதவை அடித்து வருகிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் தமக்கு வாய்ப்பளிக்குமாறு கருண் நாயர் தம்முடைய பேட்டால் சத்தமின்றி இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

வாய்ப்பு இல்லை:

இந்நிலையில் எவ்வளவு தான் போராடினாலும் கருண் நாயருக்கு 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஏற்கனவே அசத்திய வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே வருங்காலங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “கருண் நாயர் தற்போது அற்புதமான ஃபார்மில் இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது. மயங் அகர்வாலும் தற்போது கொஞ்சம் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே தயாரான நிலையில் இருக்கிறது என்பதே அழகாகும்”

- Advertisement -

போராடினால் கிடைக்கும்:

“அதில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது. ஆம் தற்போது விளையாடுவதை வைத்து கருண் நாயரை அணிக்குள் கொண்டு வருவதற்கான ஆர்வம் உங்களுக்கு ஏற்படலாம். மக்கள் அப்படி பேசுவதற்கான தகுதியை அவர் பெற்றுள்ளார். இருப்பினும் திடீரென அவர் சாம்பியன்ஸ் டிராபி அணிக்குள் வருவார் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் பேச்சுக்கள் இப்படி தொடர்ச்சியாக சென்றால் ஏன் வர முடியாது?”

இதையும் படிங்க: சர்பராஸ் கான் தப்பே பண்ணிருந்தாலும் சீனியரான நீங்க தான் பேசியிருக்கனும்.. கம்பீருக்கு ஹர்பஜன் அட்வைஸ்

“வேகம் மற்றும் சுழலை நல்ல ஃபார்மில் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் எப்போதுமே துப்பாக்கியை போன்றவர். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஏற்கனவே ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களும் உடனடியாக நீக்கப்பட மாட்டார்கள். எனவே கருண் நாயருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement