- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்ன சொன்னாலும் ஆஸியில் இம்முறை இந்தியா ஜெயிப்பது கஷ்டம்.. காரணம் இது தான்.. டிகே, தீப் தாஸ்குப்தா

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் இம்முறையும் ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று இங்குள்ள ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் 2020-21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அப்போது முக்கிய வீரர்கள் இல்லாமலேயே கொதித்தெழுந்த இந்தியா ரஹானே தலைமையில் 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இருப்பினும் இம்முறை இந்தியாவை தோற்கடிப்போம் என்று ரிக்கி பாண்டிங் முதல் பட் கமின்ஸ் வரை ஆஸ்திரேலியாவின் முன்னாள் இந்நாள் வீரர்கள் தொடர்ந்து சவால் விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்தியாவின் ஹாட்ரிக் கஷ்டம்:

இந்நிலையில் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக ஆஸ்திரேலியாவில் வெல்வது மிகவும் கடினம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி வென்றால் அதுவே இந்திய கிரிக்கெட்டில் உச்சகட்ட மகத்தான வெற்றியாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் உங்களுக்கு சரியான ஸ்கோரை சொல்ல முடியாது. ஆனால் இம்முறை ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக வீழ்த்துவது கடினம். ஆனால் அதையும் தாண்டி வென்றால் அது வரலாற்றில் இந்திய அணி பெற்ற மகத்தான வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

- Advertisement -

பலமான ஆஸ்திரேலியா:

மற்றொரு முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா இதுப் பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் கடந்த 2 தொடர்களை விட அது மிகவும் நெருக்கமாக இருக்கும். 2018இல் வார்னர், ஸ்மித் போன்றவர்கள் ஆஸ்திரேலிய அணியில் விளையாடவில்லை. 2020-21 தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்ததாகவே நான் கருதினேன்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலி மட்டுமல்ல அஷ்வினும் இந்திய அணிக்காக பாடுபட்டு இருக்காரு – தமீம் இஃபால் பாராட்டு

“ஆனால் இம்முறை பட் கமின்ஸ் தலைமையில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் கடந்த 2 முறை இந்தியா சென்றதை விட இப்போது ஆஸ்திரேலியா கொஞ்சம் வலுவான அணியாக உள்ளனர். அதே சமயம் காயத்திலிருந்து குணமடையாத ஷமி, பும்ரா, சிராஜ் ஆகிய அனைவரும் 5 போட்டிகளிலும் விளையாடினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்தியா வென்ற 2018-19, 2020-21 ஆகிய 2 தொடர்களிலும் டிம் பெய்ன் தலைமையில் முழு பலத்துடன் இல்லாத ஆஸ்திரேலியா தற்போது கமின்ஸ் தலைமையில் பலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -