டி20யில் அசத்தும் கம்பீர்.. டிராவிட் இடத்தில் இதை செய்யலன்னா டெஸ்ட் ஃபார்மட் ரொம்ப கஷ்டம்.. டிகே பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்குப் பின் கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருடைய தலைமையில் இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகள் பெற்றது. ஆனால் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 27 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு தொடரில் முதல் முறையாக தோற்றது.

அதை விட வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வி ஆறுவதற்குள் ஆஸ்திரேலிய மண்ணில் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா மீண்டும் தோல்வியை சந்தித்தது. அதனால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 10 வருடங்கள் கழித்து இழந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப ஃபைனலுக்கும் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

சுமாரான கோச்சிங்:

இந்நிலையில் ஐபிஎல் போல இந்திய டி20 அணியை கௌதம் கம்பீர் வெற்றிகரமாக வழி நடத்துவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய யுக்திகள், வீரர்கள் தேர்வு சுமாராக இருப்பதாகவும் கார்த்திக் கூறியுள்ளார். எனவே அதை சரி செய்யாவிடில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் அசத்த முடியாது என்றும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீரை பொறுத்த வரை நீங்கள் அவரை கொஞ்சம் தளர்த்த வேண்டும். ஏனெனில் அவர் மிகவும் கடினமான நேரத்தில் வந்திருக்கிறார். குறிப்பாக வெற்றிகரமாக செயல்பட்ட ராகுல் டிராவிட் இடத்தை நிரப்புவது எளிதல்ல. டி20 கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் இருப்பதால் கம்பீர் அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளார்”

- Advertisement -

சவாலான டெஸ்ட்:

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிகவும் கடினமாக செல்வார். ஆம் வங்கதேச தொடரில் வெற்றி கிடைத்தது. ஆனால் அதை தவிர்த்து அவருடைய தலைமையில் இந்திய அணி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை அவர்களே முடிவெடுக்க விரும்புகிறார்”

இதையும் படிங்க: இளம் வீரரின் வருகையால் இந்திய டி20 அணியில் தனது இடத்தை இழந்த சி.எஸ்.கே வீரர் ஷிவம் துபே – காரணம் என்ன?

“இருப்பினும் சுமாரான ஃபார்மில் இருக்கும் தற்போதைய வீரர்களால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? என்பதில் கம்பீர் பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. டெஸ்ட் அணி எப்படி இருக்க வேண்டும்? அதற்கு இந்த வீரர்கள் பொருந்துவார்களா? என்பதை அவர் கண்டறிய வேண்டும். அதற்குத் தகுந்தார் போல் முடிவுகளை எடுப்பதும் அவசியம். இல்லையெனில் டெஸ்ட் போட்டிகள் கௌதம் கம்பீருக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement