அர்ஷ்தீப் பெஞ்சில் உட்கார இதான் காரணம்.. இந்தியாவின் பயமற்ற ரிஸ்க் திட்டம் பற்றி டிகே விளக்கம்

Dinesh Karthik
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றிகரமாக விளையாடத் துவங்கியுள்ளது. அத்தொடரில் அமீரகத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமர வைத்தது விமர்சனங்களை உண்டாக்கியது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (99) எடுத்த இந்திய வீரராகவும் அர்ஷ்தீப் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த விரும்பும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை பெஞ்சில் அமர வைத்து சிவம் துபேவை ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கு ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

பயமற்ற அணுகுமுறை:

இந்நிலையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் எதிரணிகளை பயமின்றி அடித்து நொறுக்கும் அணுகுமுறையை கையிலெடுத்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதனால் ரிஸ்க் எடுத்து விளையாடும் போது ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகள் விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதை சமாளித்து பெரிய ரன்கள் குவிப்பதற்காகவே அர்ஷ்தீப் சிங் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு சிவம் துபே விளையாட வைக்கப்படுவதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கார்த்திக் பேசியது பின்வருமாறு. “நான் யாரை சேர்த்தாலும் இந்த அணி என்ன செய்ய முடியும் என்பதை பொறுத்த வரை அதிகம் சேர்க்கப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சிவம் துபேவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை எடுப்பதை வைத்துக்கொள்வோம். ஆம் அவர் உங்களுக்கு பந்து வீச்சில் இன்னும் அதிகமான செயல்பாடுகளைக் கொடுப்பார்”

- Advertisement -

கார்த்திக் விளக்கம்:

“ஆனால் சிவம் துபே பேட்டிங்கில் கொடுக்கும் செயல்பாடுகளை அவர் கொடுக்க மாட்டார். அதற்காக சிவம் துபே தனிமையில் அனைத்தையும் செய்வார் என்று அர்த்தமல்ல. அவரால் கிடைக்கும் கூடுதல் பேட்டிங்கில் அணியால் என்ன செய்ய முடியும், அது நம்முடைய மொத்த பேட்டிங் அணுகுமுறையையும் எப்படி மாற்றுகிறது என்பது முக்கியம்”

இதையும் படிங்க: அவர் ரிட்டையரானதால் பாகிஸ்தான் நிம்மதியா இருப்பாங்க.. 2022 சம்பவத்தை மறக்காதீங்க.. கவாஸ்கர் பேட்டி

“எனவே இந்திய அணியின் தற்போதைய அணுகுமுறையை நான் விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தற்போது அதிக தீவிரமான கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். சூழ்நிலைகளைத் தாண்டி அதிகப்படியான ரிஸ்க் எடுக்கும் அவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் விளையாட முயற்சிக்கின்றனர். எனவே நீங்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்புவதற்கு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவை” என்று கூறினார்.

Advertisement