விராட், ரோஹித் போய்ட்டாங்க.. முதலில் சூரியகுமார் இதை செய்யணும்.. அதுக்கு ருதுராஜ் தேவை.. டிகே வெளிப்படை

DInesh Karthik
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்தது. அந்த வெற்றியுடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற்றனர். அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அங்கு நடைபெற உள்ள 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் டி20 தொடரின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக கூட நியமிக்கப்படவில்லை. மாறாக சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

டிகே அட்வைஸ்:
குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயத்தால் இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு கௌதம் கம்பீர் பரிந்துரையில் சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த அணியில் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சமீபத்திய போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். இந்நிலையில் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சூரியகுமார் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோர் முதலில் ரோஹித், விராட் கோலி ஆகியோருக்கான மாற்று வீரர்களை கண்டறிய வேண்டும் என தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அதற்கு ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற வீரர்கள் தேவை என்றும் தினேஷ் கார்த்திக் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் இந்திய அணியில் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு 4 வீரர்கள் தயாராக உள்ளதாக நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: பும்ராவே சொன்னாரு.. க்ளாஸின் 24 ரன்ஸ் அடிச்சப்போ ரோஹித் இல்லனா அவ்ளோ தான்.. அக்சர் பேட்டி

“குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சுப்மன் கில் ஆகியோர் தயாராக உள்ளனர். அதே போல ஜெய்ஸ்வால் கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டின் பிளேயிங் லெவனில் துவக்க வீரராக இருப்பார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி இலங்கைக்கு எதிராக துவங்கும் டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அதில் கௌதம் கம்பீர், சூரியகுமார் எம்மாதிரியான அணியை உருவாக்க விரும்புகிறார்கள் என்பது தெரியும் என்றால் மிகையாகாது.

Advertisement