பும்ராவே சொன்னாரு.. க்ளாஸின் 24 ரன்ஸ் அடிச்சப்போ ரோஹித் இல்லனா அவ்ளோ தான்.. அக்சர் பேட்டி

Mohammed Shami 5
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் அப்போட்டியில் 34/3 என சரிந்த இந்தியாவுக்கு விராட் கோலி 76, அக்சர் பட்டேல் 47, துபே 27 ரன்கள் விளாசி கை கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 177 ரன்களை துரத்திய தென்னாபிரிக்காவை டீ காக், ட்ரிஷன் ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாஸின் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். குறிப்பாக அக்சர் பட்டேல் வீசிய ஒரே ஓவரில் 24 ரன்கள் அடித்த க்ளாஸின் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். ஆனால் அவரை முக்கிய நேரத்தில் பாண்டியா அவுட்டாக்கிய நிலையில் 16, 18வது ஓவரில் பும்ரா வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார்.

- Advertisement -

கேப்டனின் ஆதரவு:
அப்படியே அர்ஷ்தீப் சிங்கும் 19வது ஓவரில் அசத்திய நிலையில் கடைசி ஓவரில் பாண்டியா வேகத்தில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்சை சூரியகுமார் அபாரமாக பிடித்ததால் இந்தியா வென்றது. இந்நிலையில் அப்போட்டியில் ஒரே ஓவரில் 24 ரன்கள் கொடுத்த போது தம்மால் இந்தியாவின் வெற்றி முடிந்ததாக நினைத்து சோகத்தில் ஆழ்ந்ததாக அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.

ஆனால் அப்போது “போட்டி இன்னும் முடியவில்லை” என்று சொன்ன கேப்டன் ரோஹித் தமக்கு ஆதரவு கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் பும்ரா கொடுத்த உத்வேகத்தை பற்றியும் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முதல் 5 நொடிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக நினைத்து சோகத்தில் ஆழ்ந்தேன். இருப்பினும் நம்மால் அனைத்தையும் திருப்ப முடியும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது”

- Advertisement -

“அப்போது என்னிடம் வந்த ரோஹித் பாய் போட்டி இன்னும் முடியவில்லை என்று சொன்னார். இருதரப்பு தொடர்களில் அடி வாங்கினால் அனைத்து முடிந்தது என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அப்போட்டியில் நாங்கள் யாருமே வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை. 20வது ஓவரின் கடைசி பந்து வரை எடுத்துச் செல்ல விரும்பினோம். அதே போல பேட்டிங்கில் நான் தவறான நேரத்தில் அவுட்டானேன்”

இதையும் படிங்க: எல்லார் முன்னாடியும் பாண்டியா திட்டுனாரு.. இவ்ளோ செஞ்சும் எந்த ஐபிஎல் அணிக்கும் நம்பிக்கை வரல.. ஷமி ஆதங்கம்

“என்னுடைய தவறால் அவுட்டானதால் நான் மிகவும் கோபமடைந்தேன். ஏனெனில் நான் பந்தை நன்றாக அடித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்புறம் விராட் பாய் நன்றாக செட்டிலானர். அதனால் அதிரடியாக விளையாட திட்டமிட்டிருந்த நாங்கள் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்கள் சேர்த்திருப்போம். மேலும் முதல் 3 ஓவர்களில் நான் தனியாக அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம் வந்து எனது தோளில் தட்டிக் கொடுத்த பும்ரா “நீங்கள் 4 ஓவர்கள் வீசினீர்கள். அது நமக்கு வேகத்தைக் கொடுத்தது. அதை விட்டு விடுங்கள்” என்று சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement