ஒரு பந்து கூட சந்திக்காத அவரை ஏன் நீக்குனீங்க – இந்தியாவின் முடிவில் பாக் ஜாம்பவான் அதிருப்தி

Dinesh-Karthik
Advertisement

2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பரம எதிரி பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் அழுத்தம் நிறைந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வழக்கம் போல முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தலைகுனிவை சந்தித்துள்ளது. அந்த போட்டியில் விராட் கோலி தவிர ரோகித் சர்மா உள்ளிட்ட எஞ்சிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காதது, 19வது ஓவரில் புவனேஸ்வர் குமார் 19 ரன்களை வாரி வழங்கியது, அர்ஷிதீப் சிங் விட்ட கேட்ச் போன்ற அம்சங்கள் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

அதைவிட அப்போட்டியில் 181 ரன்கள எடுத்த இந்தியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 15 – 20 ரன்கள் குறைவாக இருந்ததாக அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். அ ந்த வைகையில் ஐபிஎல் 2022 தொடரில் அதிரடியாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து 16 – 20 வரையிலான கடைசி கட்ட ஓவர்களில் அதுபோன்ற முக்கிய ரன்களை அதிரடியாக சேர்க்கும் திறமை கொண்ட தினேஷ் கார்த்திக் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருந்த போதிலும் சம்மந்தமின்றி அந்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது தோல்விக்கு காரணமாகியது. மறுபுறம் அவரை கழற்றிவிட்டு வாய்ப்பளிக்கப்பட்ட ரிஷப் பண்ட் வழக்கம் போல முக்கிய நேரத்தில் தேவையற்ற ஷாட் அடித்து வெறும் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

- Advertisement -

வெறும் 1 பந்து:
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக இதுவரை 56 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றுள்ள ரிஷப் பண்ட் அதில் ஒரு முறை கூட சிறப்பாக செயல்பட்டதே கிடையாது. முன்னதாக ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களும் பினிஷிங் செய்யும் திறமை பெற்றுள்ளார்கள் என்பதால் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று ஆசிய கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போதே நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

RIshabh Pant Dinesh Karthik

அவர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் இந்த போட்டி தினேஷ் கார்த்திக்கின் அருமையையும் பினிஷிங் செய்வதன் முக்கியத்துவத்தையும் காட்டியது என்றே கூறலாம். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் ஒரு பந்தை மட்டுமே சந்தித்த அவருக்கு ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி முழு வாய்ப்பு கொடுக்காமல் தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் முக்கிய போட்டியில் அதிரடியாக நீக்கியது அணி நிர்வாகத்தின் பதற்றமான மன நிலைமையை காட்டுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தேவையற்ற மாற்றங்களால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் இந்த மாற்றங்களை செய்திருக்கவே தேவையில்லை. குறிப்பாக இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் எந்த ஒரு பந்தையும் எதிர்கொள்ளாமல் இருந்த போதிலும் தேவையின்றி விளையாடும் 11 பேர் அணியில் நீக்கப்பட்டுள்ளார். இவ்வளவு மாற்றங்களை செய்து அணியை வெளியிட்ட போது இந்தியா பதற்றமடைந்ததை நான் பார்த்தேன்” என்று கூறினார்.

Inzamam

மேலும் அடுத்து வரும் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கை நம்பி வாய்ப்பு கொடுக்குமாறு இன்சமாம் கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல் இந்த தோல்வியால் பைனலுக்கு செல்ல செப்டம்பர் 6ஆம் தேதியன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் கடைசி 2 போட்டிகளில் 180+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த இலங்கை வலுவான அணியாக மாறியுள்ளது. ஆனாலும் அந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு சற்று அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் இன்சமாம் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : தற்போதைய டி20 கிரிக்கெட்டின் டாப் 5 பெஸ்ட் பிளேயர்ஸை தேர்ந்தெடுத்த ரிக்கி பாண்டிங் – ரேங்கிங் லிஸ்ட் இதோ

“இலங்கை தனிநபரை சாராமல் அணியாக இணைந்து விளையாடுகிறது. அதிலும் முதல் போட்டியில் தோற்ற பின் அவர்கள் கொடுத்துள்ள கம்பேக் அற்புதமாக இருந்தது. இருப்பினும் இலங்கையை விட இந்தியா வெல்வதற்கு சற்று அதிகமான வாய்ப்புள்ளது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் தற்சமயம் இலங்கை சிறப்பான கிரிக்கெட் விளையாடுவதால் இந்த போட்டி மிகச்சிறந்த கிரிக்கெட்டாக அமையும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement