15 வருடங்களுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Karthik
- Advertisement -

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

Ind vs ban 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.

பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

karthik

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டி போட்டு வந்தார். 2004ஆம் ஆண்டு அறிமுகமானவர் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அணிக்கு தேர்வானார் ஆனால் அந்த தொடரில் ஒரு போட்டி கூட ஆடவில்லை பிறகு 2011, 15 ஆகிய தொடர்களில் அவர் தேர்வாகவில்லை. அதன் பிறகு மீண்டும் 2019 ஆண்டு தற்போது தேர்வாகியுள்ளார். அதன்படி நேற்று முதல் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றார். இனி வரும் போட்டிகளில் அவர் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் 15 வயதிற்கு பிறகு அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement