உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனிக்கு முன் நான் பேட்டிங் செய்ய இதுவே காரணம் – தினேஷ் கார்த்திக் பகிர்வு

Karthik
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோனிக்கு முன்னதாக தான் ஏன் இறங்கினேன் என்று தற்போது தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் ஒருநாள் தொடருக்கான உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் நடந்தது.
இதில் இந்திய அணி குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று அபாரமாக இருந்தது. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.

Karthik

- Advertisement -

இதில் நியூசிலாந்து அணி 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கு மிக எளிதாக இந்திய அணியால் எளிதில் எட்டப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் திடீரென தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர் .ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழக்க இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா அல்லது மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரில் ஒருவர்தான் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக தினேஷ் கார்த்திக் அணுப்பப்பட்டார். தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜடேஜா மற்றும் தோனி இறுதிவரை போராடி சற்று ஆறுதல் அளித்தனர். தற்போது ஏன் தோனிக்கு முன்னதாக இறங்கினேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

karthik

தோனிக்கு முன்பாக நான் இறங்குவேன் என்று எனக்கே தெரியாது. ஏனென்றால் நான் 7வது இடத்தில் தான் களம் இறங்கப் போகிறேன் என்று முன்னரே தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதால் அவசர அவசரமாக களமிறங்கிய ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். உடனடியாக நான் உள்ளே சென்றேன்.

- Advertisement -

நான் உள்ளே சென்ற உடன் எனது நோக்கம் என்னவென்றால் டிரென்ட் போல்ட்டின் ஸ்பெல் முடியும் வரை தாக்குப் பிடிப்பது தான். அதனை நான் சரியாக செய்தேன் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். ஆனால் அவரும் தவறான நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தினேஷ் கார்த்திக் சிறிதளவு பாட்னர்ஷிப் செய்திருந்தால் இந்திய அணி இலக்கினை நெருங்கி இருக்க வாய்ப்புள்ளது.

Jadeja

ஆனால் இறுதியில் போட்டி நமக்கு சாதகமாக அமையவில்லை. கோலியின் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்று தோனிக்கு பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு அனைத்தும் வீணாக முடிந்தது. இருப்பினும் அந்த தொடரில் அந்த ஒரு தோல்வியை தவிர இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement