தோனி செய்யாத சாதனையை செய்து முடித்த தினேஷ் கார்த்திக்..! பாராட்டு மழையில் தினேஷ்

Dinesh-karthick
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 வது லீக் போட்டி கொல்கத்தா கொல்கத்தா, ஹெடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று தனது பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

dinesh karthik

- Advertisement -

நேற்று (மே 15) நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளுக்குமே முக்கியமான ஆட்டமாக இருந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்து, இதில் கொல்கத்தா அணி சார்பில் குலதீப் யாதவ் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான திருப்பதி 27 ரன்களும் ஜோஸ் பட்லர் 39 ரன்களை எடுத்திருந்தனர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இதில் கொல்கத்தா அணியின் கிரிஸ் லைன் அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்திருந்தார்.

dinesh-karthik-bcci

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 3 கேட்சுகள் மற்றும்1 ஸ்டாம்பிங் செய்திருந்தார். இதன் மூலம் ஐ.பிஎ.ல் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிகப்படியான எதிரணி வீரர்களை ஆட்டமிழக்க செய்த கீப்பர் என்ற சாதனையை படித்துள்ளார். இதன் மூலம் ஏற்கனவே இந்த சாதனையை படைத்த விர்தீமன் சஹாவின் சாதனையை சமன் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

Advertisement