KKR vs CSK : தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை அணியும்

Karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

- Advertisement -

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது கொல்கத்தாவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனும் மற்றும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரருமான ரசல் விளையாடுவதில் சிக்கல் இருக்கின்றது என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக தினேஷ் கார்த்திக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.இருப்பினும் அவர் இன்றைய பயிற்சியில் ஈடுபட்டார். ஒருவேளை இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் கொல்கத்தா அணியின் ராபின் உத்தப்பா அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

Russell

மேலும், ரசல் டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மணிக்கட்டு பகுதியில் காயம் அடைந்தார். இந்த காயத்தினால் ரசலும் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரும் இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. சென்னை அணியில் ஏற்கனவே ஹர்பஜன் விளையாட மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement