தாவனை முட்டி போட வைத்த தினேஷ் கார்த்திக். எதற்காக இந்த ஆவேசம் ? – களத்தில் நடந்தது என்ன ? – வீடியோ இதோ

karthik

ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி ரசல் மற்றும் கில் ஆகியோரது சுமாரான ஆட்டத்தினால் 154 ரன்கள் மட்டுமே குவித்தது.

russell

அதன் பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் தாவனின் அதிரடியான ஆட்டம் காரணமாக முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ரிஷப் பண்ட் 16 ரன்களில் ஆட்டமிழக்க மார்கஸ் ஸ்டாய்நிஸ் மற்றும் ஹெட்மையர் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா 41 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் என 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பத்திலிருந்து விக்கெட்டை கொடுக்காமல் சிறப்பாக அடித்து விளையாடினர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது விக்கட்டும் விழவே விழாது என்று நினைக்கும் அளவிற்கு அவர்களின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.

dhawan

இந்நிலையில் சுனில் நரைன் வீசிய ஒரு ஓவரில் லெக் சைடில் வந்த பந்தை பிடித்த தினேஷ் கார்த்திக் தவான் கிரீஸின் நின்றாலும் ஸ்டம்பிங் செய்துவிட்டு அவரிடமே “ஹவுஸ் அட்” என்று சற்று ஆவேசமாக கத்தினார். அதனைக் கண்ட தவான் தனது பேட்டை கீழே போட்டு விட்டு கார்த்திக்கு எதிராக முட்டி போட்டார்.

- Advertisement -

இந்த விடயம் தமாஷாகவே நடைபெற்றது. பின்னர் இருவரும் அடுத்த சில நொடிகளில் சிரித்துக்கொண்டனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு சற்று வினோதமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ :