பார்திவ் படேலின் கேவலமான சாதனையை முறியடித்த திணேஷ்கர்த்திக்..!

- Advertisement -

இந்தியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி. இன்று(ஜூன் 14 ) பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அசாதாரணமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

dinesh
dinesh

இளம் வீரராக இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், தனது 19 வயதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார். அதுவரை இந்திய விக்கெட்கீப்பராக இருந்த பார்திவ் படேல் சரியாக விளையாடததால் அவரது இடத்தை தினேஷ் கார்த்திக் பிடித்தார். அதன் பின்னர் 23 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார்.

- Advertisement -

மேலும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை மட்டுமே தினேஷ் கார்த்திக் குவித்துள்ளார். அதனால் இவருக்கு 2010 ஆம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் வேறு எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 8 ஆண்டுகள் கழித்து தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

dinesh1
dinesh1

இந்த 8 ஆண்டுகளில் தினேஷ் கார்த்திக், இந்தியா விளையாடிய 87 டெஸ்ட் போட்டிகளை தவற விட்டுள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட முதல் இந்திய வீரர் என்ற பார்தீவ் படேல் சாதனையை முறியடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இதற்கு முன்னர் இந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பார்தீவ் படேல் 83 டெஸ்ட் போட்டிகளை தவரவிட்டது தான் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement