அந்த பையன் 15 வயசுலயே இங்கிலாந்துல அடிக்கிறத பாத்தேன்.. இளம் வீரரை பாராட்டிய திலிப் வெங்சர்கார்

Dilip Vengsarkar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 – 1* என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியாவின் வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இருப்பினும் அந்த போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸ் 209, சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக நின்று 209 ரன்கள் குவித்த யசஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

15 வயதிலேயே:
2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனைப் படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பிலும் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் அவர் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் வாரியத்தில் தாம் முக்கிய பொறுப்பில் இருந்த போது ஜெய்ஸ்வாலை 15 வயதில் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றதாக முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். அந்த வயதிலேயே சவாலான இங்கிலாந்து மண்ணில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடியதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த அவரை இங்கிலாந்துக்கு நான் அழைத்துச் சென்ற போது 14 – 15 வயது தான் இருக்கும். இங்கிலாந்தில் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒவ்வொரு போட்டியிலும் அசத்திய அவரிடம் ரன்கள் குவிப்பதற்கான பசி இருந்ததை நாங்கள் பார்த்தோம். அப்போதே இந்த குழந்தை தம்மிடம் உள்ள திறமைக்கு பெரிய இடத்திற்கு செல்லும் என்பது எனக்கு தெரியும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : பாண்டியா தலைமையில் மும்பை தெரியல.. அந்த டீம் பிளே ஆஃப் போய்டுவாங்க.. கவாஸ்கர் கணிப்பு

“பின்னர் அண்டர்-19 அணிக்கு சென்ற அவர் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் நிறைய ரன்கள் அடித்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் படிப்படியாக வளர்ந்து தற்போது அவர் உள்ள இடத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் என்னுடைய காலத்தில் 25 வருடங்கள் விளையாடிய டாடார் யூனியன் உள்ளூர் அணிக்கு தற்போது அவர் கேப்டனாக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement