இவரை ஏன் டி20 அணியில் சேக்க மாட்றீங்க ? நான் செலக்டரா இருந்தா நிச்சயம் இவர் ஆடுவார் – திலீப் வெங்சர்க்கார் அதிரடி

Dilip-Vengsarkar

இங்கிலாந்து அணிக்கெதிரான தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் ஸ்பின் வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான பந்துவீச்சை கொடுக்கவில்லை. டி20 தொடரில் சரியாக பங்களிக்காத ஸ்பின் பவுலர்கள் ஒருநாள் தொடரிலும் சொதப்பி வந்துள்ளனர். குறிப்பாக மிடில் ஓவர்களில் ரன்களை வாரி கொடுத்து எதிரணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஒருநாள் தொடருக்கான அணியில் விளையாடிய ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் மோசமான பந்துவீச்சினை வெளிப்படுத்தினர்.

bhuvi

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் திலீப் தற்போதைய இந்திய அணியில் தலைமை தேர்வாளர் ஆக இருந்தால் நிச்சயம் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியில் களமிறங்கும் வைப்பேன் என்று கூறியுள்ளார். சுழற்பந்து யூனிட் இப்படி போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக மீண்டும் இந்திய அணியில் மீணடும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாட வைக்கலாம்.

ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். டெஸ்ட் தொடரில் சிறப்பாக அசத்தி வந்த ரவிச்சந்திரனை அஸ்வினை நிச்சயம் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சேர்த்து இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கும் பொழுது நல்ல பார்மில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு தரலாம்.

ashwin 1

ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஜோடியாக ஆடும்போது ரவிச்சந்திரன் அஸ்வின் வாஷிங்டன் சுந்தரும் ஏன் ஆட கூடாது என்றும் திலீப் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு மறுபடியும் ஆடினால் நிச்சயம் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவார் இதன்மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து ரன்களை குறைக்க மிகப்பெரிய அளவில் உதவுவார்.

- Advertisement -

Ashwin

எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாட வைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விரைந்து யோசிக்க வேண்டும் என்றும் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.