அகர்கர் இடத்தில் நான் இருந்தா.. விராட் கோலியை இதை செஞ்சுட்டு போங்கன்னு வற்புறுத்திருப்பேன்.. திலிப் வெங்சர்கார்

Dilip Vengsarkar 5
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 முதல் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்கள் அடித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அதே போல அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா 40 வெற்றிகளைப் பெற்றது.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடிய அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தார். ஆனால் எஞ்சிய போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தொடர்ச்சியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து இந்தியாவின் தோல்விக்கு காரணமானார்.

- Advertisement -

கோலியை வற்புறுத்திருப்பேன்:

இருப்பினும் 35 வயதில் நல்ல ஃபிட்னஸ் கொண்டுள்ள அவர் இன்னும் சில விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் தன் மீதான விமர்சனங்களுக்கு இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுப்பதற்காக விராட் கோலி பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். அதனால் இங்கிலாந்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ரோகித் சர்மா விடைபெற்ற அடுத்த சில நாட்களில் திடீரென இன்ஸ்டாகிராமில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தாம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கராக இருந்திருந்தால் இங்கிலாந்தில் விளையாடி விட்டு ஓய்வு பெறுங்கள் என்று விராட் கோலியை வற்புறுத்தியிருப்பேன் என முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடரில் விளையாடிய பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெறுங்கள் என்று விராட் கோலியை வற்புறுத்தியிருப்பேன்”

- Advertisement -

மிஸ் செய்யாத இந்தியா:

“ஏனெனில் இங்கிலாந்தில் நமக்கு அவருடைய கிளாஸ் மற்றும் அனுபவம் தேவைப்பட்டது” என்று கூறினார். மொத்தத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிசந்திரன் அஸ்வின் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அதன் காரணமாக இங்கிலாந்தில் சுப்மன் கில் தலைமையிலான தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: தோனி மட்டுமல்ல.. கில்கிறிஸ்டையும் முந்தி ரிஷப் பண்ட் இந்த உலக சாதனை படைப்பாரு.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இருப்பினும் ஆரம்பம் முதலே அசத்திய இளம் அணி 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியில் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இளம் அணிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement