இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த வெற்றியில் அனைவரைப் போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தம்முடைய பங்காற்றினார். குறிப்பாக முதல் போட்டியிலேயே 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆண்டி ஃபிளவர் உலக சாதனையை அவர் சமன் செய்தார்.
அந்தத் தொடரில் தோனியை முந்தி அதிக சதங்கள் மற்றும் சிக்ஸர்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற 2 வரலாற்று சாதனைகளையும் அவர் படைத்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட அவர் சிறந்த கீப்பர் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இதுவரை 47 போட்டிகளில் விளையாடியுள்ள ரிசப் பண்ட் 3427 ரன்களை 44.50 என்ற சராசரியில் குவித்துள்ளார்.
தோனியை மட்டுமல்ல:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்தி அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் விரைவில் படைப்பார் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டை முந்தி அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையையும் பண்ட் படைப்பார் என்று அவர் கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அதிகப் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் குவித்த பட்டியலில் எம்.எஸ். தோனி மேலே இருக்கிறார். அவர் 90 போட்டிகளில் 6 சதங்கள் உட்பட 4876 ரன்களை 38.09 சராசரியில் அடித்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த 5 வருடங்களில் 6 சதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவருக்கு பின் (8) தோனி இருக்கிறார். ரன்கள் பட்டியலில் தோனியை விட அவர் 1400 ரன்கள் பின்தங்கியிருக்கிறார்”
கில்கிறிஸ்டை முந்துவாரு:
“எனவே இன்னும் அதிகமாக விளையாடும் போது அவர் தோனியை முந்துவார். இங்கிலாந்தில் அதிக ரன்கள் அடித்த கீப்பர்களில் ரிசப் பண்ட் மட்டுமே 1000 ரன்கள் அடித்த ஒரே விக்கெட் கீப்பராக இருக்கிறார். அங்கே அவர் 4 சதங்கள் 5 அரை சதங்கள் அடித்துள்ளார். அதனால் இங்கிலாந்தில் அவருக்கு சிலைகள் கூட கட்டப்படலாம்”
இதையும் படிங்க: இன்னும் ஒரு வாரம் இங்கயே இருங்க.. சூரியகுமார் யாதவ்க்கு கிரீன் சிக்னல் கொடுக்க மறுக்கும் – தேசிய கிரிக்கெட் அகாடெமி
“டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆல் டைம் பட்டியலைப் பார்க்கும் போது ஆடம் கில்கிறிஸ்ட் 96 போட்டிகளில் 5570 ரன்களை 47.60 சராசரியில் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் அவரையும் ரிஷப் பண்ட் முந்துவார். ஏனெனில் அதற்கு 2250 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே சந்தேகத்தின் நிழலின்றி ரிஷப் பண்ட் இந்தியா மற்றும் இந்த உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேரியரை முடிப்பார்” என்று கூறினார்.



