அனுபவத்தை விட அதான் முக்கியம், 2007இல் ட்ராவிட்டுக்கு பின் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? வெங்சர்க்கார் விளக்கம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் கொஞ்சமும் போராடாமல் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை ஆரம்பத்திலேயே பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத கேப்டன் ரோகித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அதை விட விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் ஐசிசி உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து இந்த ஃபைனலிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த நிறைய ரசிகர்கள் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை நினைத்து சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் அவரது தலைமையில் 4 ஐசிசி ஃபைனல்களில் விளையாடிய 3 கோப்பைகளை வென்ற இந்தியா வரலாற்றின் இதர கேப்டன்கள் தலைமையில் 7 ஃபைனல்களில் விளையாடி 1983இல் ஒரு கோப்பையை மட்டுமே வென்றது.

சரித்திரத்தின் பின்னணி:
முன்னதாக 2004இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே அதிரடியாக செயல்பட்டு இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கான இலக்கணத்தை ஏற்படுத்திய எம்எஸ் தோனி 2007இல் உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக அனுபமில்லாத போதிலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி அழுத்தமான தருணங்களில் முக்கிய முடிவுகளை எடுத்து கோப்பையை வென்று காட்டினார்.

Trophies Won By MS Dhoni

அது வெஸ்ட் இண்டீஸில் அதே வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை டிராவிட் தலைமையில் சந்தித்த படுதோல்விக்கு மிகப்பெரிய மருந்தாக அமைந்தது என்றே சொல்லலாம். அத்துடன் 2010இல் வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்றிய அவர் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று காட்டினார்.

- Advertisement -

மேலும் 2013இல் விராட், ரோஹித், ரெய்னா, தவான், ஜடேஜா என தாம் உருவாக்கிய வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராஃபியையும் வென்ற அவர் உலகிலேயே 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் கூட செய்யாத உலக சாதனையை படைத்தார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் பொன்னான காலங்களை ஏற்படுத்தி சரித்திரத்தை மாற்றி கேப்டனாக பார்க்கப்படும் அவரை போன்ற ஒருவர் வரமாட்டாரா என்பதே தற்போதைக்கு இந்திய ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது.

dhoni 2013 Champions Trophy World Cup

முன்னதாக 2007இல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் தோனியை கேப்டனாக நியமிக்க பரிந்துரைத்தார் என்பதை அனைவரும் அறிவோம். அந்த சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் அவரை கேப்டனாக நியமிக்காமல் வெள்ளை பந்து போட்டிகளுக்கு மட்டுமே அப்போதைய திலீப் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழு நியமித்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த சமயத்தில் அனுபவத்தை பார்க்காமல் சக வீரர்களுடன் எப்படி பேசுகிறார், இருக்கும் வீரர்களை எப்படி கையாள்கிறார், பாடி லாங்குவேஜ் போன்ற சில அடிப்படை விஷயங்களை மட்டுமே பார்த்து தோனியை கேப்டனாக நியமித்ததாக திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

dilip

இதையும் படிங்க:அவங்கள நம்பி ஏமாந்தது போதும் சாமி, அந்த 6 இடத்துக்கு இளம் வீரர்களை போடுங்க – சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை

“அந்த சமயத்தில் தாமாக தேர்ந்தெடுத்தோம் என்று சொல்வதை விட நீங்கள் அந்த கிரிக்கெட் வீரரின் புத்திசாலித்தனம், பாடி லாங்குவேஜ், முன்னின்று அணியை வழி நடத்தும் திறன் மற்றும் இருக்கும் வீரர்களை நிர்வகிக்கும் திறன் ஆகியவற்றை பார்க்க வேண்டியிருந்தது. அந்த வகையில் கிரிக்கெட்டை தோனி அணுகும் விதம், பாடி லாங்குவேஜ் மற்றும் மற்ற வீரர்களிடம் எப்படி பேசினார் என்பதை பார்த்தோம். அதில் எங்களுக்கு நேர்மறையான உணர்வு கிடைத்ததுடன் இதர வீரர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களை பெற்றதால் நியமித்தோம்” என்று கூறினார்.

Advertisement