வித்தியாசமான ஆக்ஷனுடன் பந்துவீசும் 5 அசத்தல் பந்துவீச்சாளர்கள் – பட்டியல் இதோ

Bowling
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் எப்படி வித்தியாசமாக நகர்ந்து, படுத்து, உருண்டு அடிக்கிறார்களோ, அதேபோல் பந்து வீச்சாளர்களும் ஒத்திகை கையாண்டு வித்தியாசமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை குழப்பம் அடைய செய்து வருகின்றனர். இப்படி தங்களது கைகளையும், காலையும் ,உடம்பையும் வித்தியாசமாக வளைத்து பந்துவீசும் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

பால் ஆடம்ஸ் :

- Advertisement -

இவர் தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் ஆவார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் ரிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். தென் ஆப்பிரிக்க அணிக்கு 69 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 163 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தமாக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து இவரது வித்தியாசமான ஆக்சன் வைத்து 506 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1995 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்க அணிக்கு விளையாடினார்.

Malinga

லசித் மலிங்கா :

- Advertisement -

147 வருட கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பந்துவீச்சு ஆக்சன் இவருடையதுதான். 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புகழ்பெற்ற அப்போதிலிருந்து லசித் மலிங்காவின் இந்த ஆப்ஷனை பலரும் கற்று வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறையை வைத்து தற்போதுவரை 1,093 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

bumrah 2

ஜஸ்பிரித் பும்ரா :

- Advertisement -

தற்போதைய இந்திய இளசுகளின் ஹீரோ இவர். பந்துவீச்சு என்றாலே ஜஸ்பிரித் பும்ரா போல தான் வீச வேண்டும் என்று இளைஞர்கள் சிந்திக்க தொங்கவிட்டனர். வித்தியாசமாக இவர் பந்து வீசினாலும் இவரது பந்தை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. தற்போது 26 வயதான இவர் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏன் சொல்லப்போனால் அவரது முதல் விக்கெட்டை ஜாம்பவானான விராட்கோலி தான். இன்னும் 10 வருடங்கள் இவர் சர்வதேச அரங்கில் ஜொலிக்க போகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tanvir

சொஹைல் தன்வீர் :

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் வித்தியாசமான பந்துவீச்சின் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையை கடந்த பல ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார். 2007ம் ஆண்டிலிருந்து விளையாடிய இவர் 121 போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

மலாக்கி அக்கட்டி

நாம் இதுவரை இப்படி ஒரு நாடு கிரிக்கெட் விளையாடுகிறதா என்று கேள்வி கூட இருக்கமாட்டோம். அப்படி ஒரு நாட்டின் வீரர் தான் இவர். போட்ஸ்வானா நாடு தற்போது தான் கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ளது. ஐசிசி நடக்கும் ரீஜினல் குவாலிபயர் போட்டிகளில் போட்ஸ்வான அணிக்காக விளையாடியவர். மலாக்கி அக்கட்டி 2018 ஆம் ஆண்டு ஐசிசி இவரது வித்தியாசமான பந்துவீச்சு வீடியோ ஒன்றினை பதிவு செய்தது இவரும் இந்த பட்டியலில் இதன் மூலம் இணைந்துள்ளார்.

Advertisement