ஓட தெரியாம ஓடிட்டு அதிர்ஷ்டத்தின் மேல் பழிய போடதீங்க, ரன் அவுட் பற்றி ஹர்மன்ப்ரீத் கருத்தை விளாசும் முன்னாள் கேப்டன்

Indian Womens
- Advertisement -

தென்னாபிரிக்காவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டாலும் மீண்டும் நாக் அவுட் சுற்றில் வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கிய நேரங்களில் சொதப்பி கையில் வைத்திருந்த வெற்றியை தாரை வார்த்து 5 ரன்கள் வித்யாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் 2020 டி20 உலக கோப்பை ஃபைனல், 2022 காமன்வெல்த் ஃபைனல் ஆகிய போட்டிகளை தொடர்ந்து ஹாட்ரிக் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு நாக் அவுட் போட்டியில் இந்தியா தோற்றதுள்ளது.

Womens Team

- Advertisement -

அப்போட்டியில் ஆரம்பத்திலேயே பீல்டிங்கில் சொதப்பி முக்கிய கேட்ச்களை கோட்டை விட்ட இந்திய கிரிக்கெட் அணியினர் டெத் ஓவர்களில் அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் சிக்ஸர் வழங்கியது 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய பங்காற்றியது. மேலும் 173 ரன்களை துரத்தும் போது ஆரம்பத்திலேயே குறைந்தபட்சம் 50 ரன்கள் அடித்து கொடுக்க வேண்டிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

சொதப்பிய ஹர்மன்ப்ரீத்:
அதனால் 21/3 என சரிந்த இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் முக்கிய நேரத்தில் அவுட்டானாலும் மறுபுறம் அரை சதம் கடந்து போராடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் டபுள் எடுக்க முயற்சித்த போது பந்து மெதுவாக வருவதாக நினைத்து சற்று அஜாக்கிரதையாக செயல்பட்ட அவர் வெள்ளைக்கோட்டை தொடுவதற்காக பேட்டை சறுக்கியவாறு கொண்டு சென்ற போது பிட்ச்சில் இருந்த புற்கள் அதை தடுத்து நிறுத்தியது.

Virender Sehwag Womens

அதனால் அவர் உள்ளே சென்றும் அவருடைய பேட் மற்றும் உடல் பாகங்கள் வெள்ளைக்கோட்டை தொடாததால் ரன் அவுட்டான தருணம் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தோல்வியை கொடுத்தது. அதனால் ஸ்கூல் பசங்களை போல் செயல்பட்டு ஹர்மன்ப்ரீத் அவுட்டானதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்தார். ஆனால் வரலாற்றில் பலரும் இது போல் அவுட்டாகியுள்ளதால் அது துரதிஷ்டவசமாக நிகழ்வு என்றும் இந்திய அணியினர் முதிர்ச்சியுடன் விளையாடியதாக ஹர்மன்ப்ரீத் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த சமயத்தில் அஜாக்கிரதையாக ஓடியதுடன் இடது கையில் பேட்டை பிடித்திருந்ததே இந்த தவறுக்கு காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி அதிர்ஷ்டத்தின் மீது பழி போடாதீர்கள் என்று ஹர்மன்ப்ரீத்தை விமர்சித்துள்ளார். மேலும் பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்பதை 1970களிலேயே சுனில் கவாஸ்கர் தங்களுக்கு சொல்லிக் கொடுத்ததை நினைவு கூரும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Diana Edulji Harmanpreet Kaur

“அவர் பேட் தடுத்து நிறுத்தப்பட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த தருணத்தை நீங்கள் உற்றுப் பார்க்கும்போது 2வது ரன் எடுக்கும் போது அவர் ஆரம்பத்திலேயே சற்று சுணக்கமாக செயல்பட்டார். மேலும் உங்களுடைய விக்கெட் மிகவும் முக்கியமானது என்று தெரிந்தும் நீங்கள் ஏன் ரிலாக்ஸாக ஓடினீர்கள்? இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் நீங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்”

- Advertisement -

“குறிப்பாக எதிரணியில் இதே போன்ற சூழ்நிலையில் எலிஸ் பெரி டைவ் அடித்து 2 ரன்கள் எடுத்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டதை பாருங்கள். அது தான் தரமான சர்வதேச கிரிக்கட்டாகும். கடைசி வரை உங்களது முயற்சியை கைவிடக்கூடாது. ஆனால் நாம் அப்போட்டியில் போராடுவதற்கே தயாராக இல்லை. ஒவ்வொரு முறையும் இது போல் கடைசி நேரத்தில் தோற்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் 2வது ரன் எடுக்கும் போது அவர் சாதாரணமாக ஓடினார்”

இதையும் படிங்க:உ.கோ ஜெயிக்காததால் என்னை பிளாப் கேப்டன்னு சொல்றவங்க அதை பாக்கலயே – விமர்சனங்களுக்கு விராட் கோலி ஆதங்க பதில்

“அத்துடன் ஒவ்வொரு ரன் எடுக்கும் போதும் பேட்டை களத்தில் வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று 1970லயே சுனில் கவாஸ்கர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அந்த தருணத்தை நீங்கள் உற்றுப் பார்த்தால் ஹர்மன்பிரீத் பேட்டை தவறான கையில் பிடித்திருந்தார். ஒருவேளை பேட்டை தனது வலது கையில் அவர் பிடித்திருந்தால் நிச்சயமாக அந்த ரன்னை முழுமையாக்கி தன்னையும் இந்தியாவையும் காப்பாற்றியிருக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement