ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிடுகிடுவென 2 ஆம் இடத்திற்கு முன்னேறிய டெல்லி வீரர் – விவரம் இதோ

Dhawan-2
- Advertisement -

வருடா வருடம் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் நன்றாக ஆடும் வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர், விராட் கோலி ஷிகர், தவான் போன்றவர்கள் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் குறைந்தது 500 ரன்கள் அடித்து விடுவார்கள். இந்த வருடம் ஷிகர் தவான் துவக்கம் முதலே நன்றாக ஆடவில்லை. டெல்லி அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவான் முதல் 6 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

dhawan 1

- Advertisement -

ஓரளவிற்கு தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் அதன்பிறகு இரண்டு அரைசதம் மற்றும் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி இரண்டு சதங்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஷிகர் தவான்.

இதன் காரணமாக 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 465 ரன்கள் அடித்து 2 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி விட்டார். கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் முறையே 69,57,101,106 ரன்கள் குவித்து இந்தாண்டு அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கிடுகிடுவென முன்னேறினார்.

Dhawan

இந்த பட்டியலில் கேஎல் ராகுல் 540 ரன்கள் அடித்து ஒரு சதம் 5 அரைசதம் அடித்து முதலிடத்திலும், மயங்க் அகர்வால் ஒரு சதம் 2 அரைசதம் அடித்து 393 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், இருக்கின்றனர். இதே பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டு பிலேசிஸ் 375 ரன்கள் அடித்து நான்காவது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலி 347 ரன்கள் அடித்து 5வது இடத்திலும் நீடிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியின் ரிஷப் பந்த், பிரித்திவி, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெறாதது ஆச்சரியத்தை அளித்து இருக்கிறது.

Advertisement