- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி மாதிரி எனக்கு அதை செய்ய ஆசை தான்.. ஆனா இந்தியாவுக்காக மகிழ்ச்சியா கீப்பிங் செஞ்சேன்.. ஜுரேல் பேட்டி

இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. அப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தயாராக உள்ளது.

முன்னதாக இத்தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பாக விளையாடி முதல் போட்டியிலேயே 2 சதங்களை அடித்து அசத்தினார். அதற்கடுத்த காயத்தை சந்தித்து பேட்டிங் மட்டும் செய்த அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். அதற்கடுத்தப் போட்டியிலும் ரிஷப் பண்ட் பாதத்தில் காயமடைந்து வெளியேறியதால் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

- Advertisement -

தோனி திரைப்படம் போல:

அந்த வகையில் 2 போட்டிகளில் பேட்டிங் செய்யாத ஜுரேல் விக்கெட் கீப்பராக மட்டும் செய்து கடுமையாக உழைத்தார் என்றே சொல்லலாம். அதைப் பார்த்த ரசிகர்கள் எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்து ஜுரேலை கிண்டலாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் தோனியிடம் அவருடைய பயிற்சியாளர் விக்கெட் கீப்பிங் செய்கிறாயா? என்று கேட்பார்.

அதற்கு “இல்லை, நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்” என்று தோனி சொல்வார். அதே போல இத்தொடரில் இந்திய அணி ஜுரேலுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுக்காமல் கீப்பிங் மட்டும் செய்யச் சொல்வதாக ரசிகர்கள் கலாய்த்தனர். இருப்பினும் கடைசிப் போட்டியில் ரிஷப் பண்ட் மொத்தமாக விலகியதால் ஜுரேல் முழுமையாக விளையாட உள்ளார். இந்நிலையில் தோனி போல பேட்டிங் செய்யும் ஆசையிருந்தாலும் 3, 4வது போட்டிகளில் நாட்டுக்காக விக்கெட் கீப்பிங்கை மகிழ்ச்சியுடன் செய்ததாக ஜுரேல் கூறியுள்ளார்.

- Advertisement -

ஜுரேல் மகிழ்ச்சி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி திரைப்படத்தில் அவர் என்ன சொல்வார் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் தோனி பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று சொல்வார். ஆனால் பயிற்சியாளர் கீப்பிங் செய் என்று மீண்டும் மீண்டும் சொல்வார். அது வேடிக்கையானதாக இருக்கும். வெளிநாடுகளில் இது போன்ற சவால்களைக் கடந்து வருவது ஸ்பெஷலானது”

இதையும் படிங்க: இந்திய நாட்டை விட எதுவும் பெருசில்ல.. பாகிஸ்தானுக்கு எதிராக யுவ்ராஜ் படை எடுத்த முடிவு.. அப்ரிடிக்கு பதிலடி

“வெளிநாடுகளில் அசத்தினால் அனைவரும் உங்களை உயர்வாக மதிப்பிடுவார்கள். எனவே கடைசிப் போட்டியில் உற்சாகத்துடன் விளையாட காத்திருக்கிறேன். இந்த முக்கியமான போட்டியில் விளையாடி எங்களுடைய அணியின் வெற்றியில் பங்காற்ற உற்சாகத்துடன் இருக்கிறேன். துரதிஷ்டவசமாக காயமடைந்த ரிஷப் பையாவுக்கு பதிலாக நான் சிறுவயதில் கனவு கண்ட லார்ட்ஸ் மைதானத்தில் கீப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அணியின் வெற்றிக்கு உதவும் அது போன்ற வாய்ப்புகளில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -