சிட்னி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு துருவ் ஜூரேல் விளையாட வாய்ப்பு – காரணம் என்ன தெரியுமா?

Jurel-and-Pant
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு தோல்விகளை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி அதற்கு அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜுரேல் :

இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளதால் அடுத்ததாக டிசம்பர் 3-ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்ற அழுத்தத்தில் உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த சிட்னி டெஸ்ட் போட்டியானது மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனெனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரின் 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 154 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அது மட்டுமின்றி கடைசியாக மெல்போர்ன் நகரில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் மோசமான ஷாட்டை அடித்து அவர் ஆட்டமிழந்தது அனைவரின் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே ரிஷப் பண்ட் குறித்து பேசியிருந்த கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையிலும் : ரிஷப் பண்ட் இந்த தொடரில் ஆட்டமிழக்கும் ஷாட்கள் மிக மோசமாக இருக்கின்றன. ஆனால் ஏற்கனவே அவர் இதேபோன்று விளையாடி தான் சக்சஸ்ஸையும் கொடுத்திருக்கிறார். அதனால் அவரது விடயத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு ரிஷப் பண்ட் செயல்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : மெல்போர்ன் டெஸ்ட்டில் சுப்மன் கில் நீக்கப்பட்டதுக்கு இதுதான் உண்மை காரணம் – ரோஹித் சர்மா பதில்

இது குறித்து ஒரு கேப்டனாக நான் அவரிடம் பேசுவது கடினமாக இருந்தாலும் அணிக்கு என்ன தேவையோ அதை சொல்லி மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என ரோகித் சர்மா கூறியிருந்தார். இதன் மூலம் ஐந்தாவது போட்டியில் ரிஷப் பண்ட் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் கடைசி போட்டியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement