- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காயமடைந்த ரிஷப் பண்ட்.. கடைசி நேரத்தில் ஒருநாள் அணிக்குள் வந்த துருவ் ஜுரேல் – என்ன நடந்தது?

அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வடிவமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.

ரிஷப் பண்டுக்கு மாற்று வீரராக இணைந்த துருவ் ஜுரேல் :

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வடோதராவில் பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற வலைப் பயிற்சியின்போது பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்த ரிஷப் பண்டிற்கு இடுப்புக்கு மேல் பகுதியில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் இந்த ஒருநாள் தொடரில் விளையாட முடியாது என்று கண்டறியப்பட்டது.

அதன் காரணமாக அவர் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலுருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக துருவ் ஜுரேல் உடனடியாக இந்திய அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ரிஷப் பண்டிற்கு மாற்றுவீரராக துருவ் ஜுரேல் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது ஒருநாள் தொடரிலும் மாற்று வீரராக அவர் தேர்ந்தெடுக்கப்பட காரணம் யாதெனில் : இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அவர் அற்புதமான பார்மில் ரன் மழையை பொழிந்து வருகிறார்.

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய – இந்திய நட்சத்திர வீரர்

அந்தவகையில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய துருவ் ஜுரேல் 7 போட்டிகளில் 558 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டு சதங்களை அவர் இந்த தொடரில் அடித்துள்ளதால் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -