- Advertisement -
இந்திய கிரிக்கெட்

35 ஓவருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்.. கீப்பிங் செய்ய வந்த துருவ் ஜுரேல் – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 10-ம் தேதியான இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

ரிஷப் பண்டிற்கு பதிலாக கீப்பிங் செய்ய வந்த துருவ் ஜுரேல் :

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

தற்போது வரை முதல்நாள் ஆட்டத்தின் பாதி நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் அரைசதம் கடந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி சார்பாக நிதீஷ்குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது 35-வது ஓவருக்கு பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக 36-வது ஓவரிலிருந்து துருவ் ஜுரேல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். அதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

இந்த போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துகளை கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக கை விரல்களில் அடிமேல் அடி வாங்கினார். இதனால் அதிக வலியை உணர்ந்த அவர் 35 வது ஓவருக்கு பிறகு ஓய்வுவறைக்கு திரும்பினார். பின்னர் அங்கிருந்த மருத்துவ குழுவினர் மூலம் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அவரால் தொடர்ச்சியாக கீப்பிங் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க : இர்பான் பதானுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக நிதீஷ் ரெட்டி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் பெரிய காயமாக இருக்காது என்றும் நிச்சயம் அவர் முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வருவார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் போட்டியின் இடையே அவரது காயம் குறித்த முழு தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

- Advertisement -