நான் அதை மட்டும் செய்ய விரும்புறேன்.. தோனியுடன் கம்பேர் பண்ணாதீங்க கவாஸ்கர் சார்.. துருவ் ஜுரேல்

Dhruv Jurel 8
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்றது இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அந்த தொடரில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களை வைத்தே இங்கிலாந்து அணியை இந்தியா தோற்கடித்தது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

குறிப்பாக அந்த தொடரில் சுமாராக செயல்பட்டு வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்துக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற துருவ் ஜுரேல் அறிமுக போட்டியிலேயே 46 ரன்கள் அடித்து அசத்தினார். அதை விட ராஞ்சியில் 4வது போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 90 ரன்கள் அடித்து காப்பாற்றிய அவர் 2வது இன்னிங்சில் 34 ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

கவாஸ்கருக்கு நன்றி:
அந்த வகையில் அப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட்ட அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் வழியில் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டினார். அதே போல ரிஷப் பண்ட் வந்தாலும் எம்எஸ் தோனியின் உயரத்தை எட்டுவதற்கு தேவையான திறமை அவரிடம் உள்ளதாக மற்றொரு ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டினார்.

இந்நிலையில் ஜாம்பவான் தோனியுடன் தம்மை ஒப்பிட்டதற்காக சுனில் கவாஸ்கருக்கு இளம் வீரர் துருவ் ஜுரேல் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் யாராலும் தோனியாக முடியாது என்று தெரிவிக்கும் அவர் நான் துருவ் ஜுரேலாக மட்டும் வர விரும்புவதாக பணிவுடன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் துருவ் ஜுரேல் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தோனி சாருடன் என்னை ஒப்பிட்டதற்காக நன்றி கவாஸ்கர் சார். ஆனால் தோனி சார் செய்ததை யாராலும் இங்கே செய்ய முடியாது என்பது என்னுடைய சொந்த கருத்தாகும். இங்கே ஒரே ஒரு தோனி மட்டுமே எப்போதும் இருப்பார். என்னை பொறுத்த வரை நான் துருவ் ஜுரேலாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். நான் எது செய்தாலும் துருவ் ஜுரேலாக செய்ய விரும்புகிறேன். தோனி சார் லெஜன்ட். அவர் எப்போதும் அதே போலவே இருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணிக்கு – சவால் கொடுக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 வருடங்கள் கழித்து அறிமுக தொடரிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனி, ரிசப் அண்ட் ஆகியோர் படைக்காத சாதனையை துருவ் ஜுரேல் படைத்தார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாட உள்ளார். அதில் இந்திய அணிக்காக அசத்தியதால் இம்முறை அவருக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement