ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணிக்கு – சவால் கொடுக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது. இம்முறை நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் சவாலை கொடுக்கும் அளவுக்கு தரமாக இருக்கிறதா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 சீசனில் சென்னையை தோற்கடித்த ராஜஸ்தான் முதலும் கடைசியுமாக கோப்பையை வென்றது.

அதன் பின் பல்வேறு கேப்டன்கள் தலைமையில் பிளே ஆஃப் சுற்றை தொடுவதற்கே தடுமாறும் ராஜஸ்தான் சஞ்சு சாம்சன் தலைமையில் சமீப காலங்களில் நன்றாக செயல்பட்டு 2022 சீசனில் ஃபைனல் வரை சென்றது. அந்த நிலையில் இந்த சீசனில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் துவக்க வீரர்களாக ராஜஸ்தானுக்கு பெரிய பலத்தை சேர்க்கின்றனர்.

- Advertisement -

சென்னை – ராஜஸ்தான்:
இதில் ஜெய்ஸ்வால் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் நிலையில் 2022 சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற செயல்பாடுகளை பட்லர் மீண்டும் வெளிப்படுத்துவது அவசியம். அதன் பின் வரும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து விளையாட வேண்டியது வெற்றிக்கு அவசியமாகிறது. அதே போலவே புதிதாக வாங்கப்பட்டுள்ள ரோவ்மன் போவல் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்றாலும் தொடர்ச்சியாக ரன்கள் அடிக்க தடுமாறி வருவதை கடந்த சீசன்களில் பார்த்தோம்.

இருப்பினும் சிம்ரோன் ஹெட்மேர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய துருவ் ஜுரேல் ஆகியோர் ஃபினிஷர்களாக அசத்தும் திறமையைக் கொண்டுள்ளனர். ஆனால் கடந்த 5 வருடங்களாக சொதப்பி வரும் ரியன் பராக் இம்முறையும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடாது என்பதே ராஜஸ்தான் அணியின் எதிர்பார்ப்பாகும். அதே சமயம் அஸ்வின், ஆடம் ஜாம்பா மற்றும் சஹால் ஆகியோரால் ராஜஸ்தானின் சுழல் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது.

- Advertisement -

அதே போல ட்ரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, குல்தீப் சென், நன்ரே பர்கர் ஆகியோர் வேகப்பந்து வீச்சு துறையில் பலம் சேர்க்கின்றனர். எனவே ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி போன்ற ரன்களை வழங்கும் பவுலர்களை பெஞ்சில் அமர வைப்பது ராஜஸ்தானுக்கு நன்மையை கொடுக்கலாம். சென்னை அணியை பொறுத்த வரை டேவோன் கான்வே காயமடைந்தாலும் அதை சமாளிக்க மற்றொரு நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா தயாராக இருக்கிறார்.

அவருடன் நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் ஓப்பனிங்கில் வலு சேர்க்கிறார். மிடில் ஆர்டரில் ஓய்வு பெற்ற ராயுடுவுக்கு பதிலாக 14 கோடிக்கு வாங்கப்பட்ட டார்ல் மிட்சேல் ஆல் ரவுண்டராக விளையாடுவார் என்பது சென்னைக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. அவருடன் அஜிங்கிய ரகானே, மொயின் அலி ஆகிய அனுபவ வீரர்கள் மிடில் ஆர்டரை வலுப்படுத்துகிறார்கள். லோயர் மிடில் ஆர்டரில் சிக்ஸர் நாயகன் சிவம் துபே, தரமான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி ஃபினிஷர்களாக அசத்துவதற்கு தயாராக உள்ளனர்.

- Advertisement -

சுழல் பந்து வீச்சு துறையை பலப்படுத்தும் மஹீஸ் தீக்சனாவை தவிர்த்து மிட்சேல் சான்ட்னர், ஜடேஜா, மொய்ன் அலி ஆகியோர் பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பது சென்னையின் கூடுதல் பலமாகும். அதே போல வேகப்பந்து வீச்சுத் துறையை தாங்கிப் பிடிப்பதற்கு காத்திருக்கும் முஸ்தபிஸுர் ரகுமான், மதிசா பதிரனாவை தவிர்த்து சர்தூள் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோரும் பேட்டிங்கில் கணிசமாக ரன்கள் அடிக்கக்கூடியவர்கள் என்பது சென்னைக்கு பலத்தை சேர்க்கிறது.

இது போக முகேஷ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், சமீர் ரிஸ்வி போன்ற இளம் பேக்-அப் வீரர்களும் ஓரளவு நல்ல திறமையை கொண்டுள்ளனர். மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு சவாலை கொடுத்து கோப்பையை வெல்லும் அளவுக்கு தேவையான தரம் ராஜஸ்தான் அணியிடம் உள்ளது. ஆனால் அது சஞ்சு சாம்சன் எந்தளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்து தனது வீரர்களை பயன்படுத்துகிறார் என்பதில் தான் உள்ளது.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கெதிராக 2 இரட்டை சதம் அடிக்க காரணமே கவாஸ்கர் தானாம் – நடந்தது என்ன?

மறுபுறம் சாதாரண வீரர்களையே சரியாகப் பயன்படுத்தி மும்பை போன்ற வலுவான அணிகளுக்கே சவால் விடக்கூடிய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி இந்த வருடமும் ராஜஸ்தானை வீழ்த்தி 6வது கோப்பையை வெல்வதற்கு தேவையான தரமானவீரர்களை சிஎஸ்கே அணியில் கொண்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 21 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை 15 வெற்றிகளையும் ராஜஸ்தான் 14 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

Advertisement