இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்து சில தினங்களுக்கு முன்னர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு மட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தும் அசத்தியது.
துருவ் ஜுரேல் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
ஏற்கனவே இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணியானது கடைசி டெஸ்ட் போட்டியில் போது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்திய அணி பெற்ற இந்த த்ரில் வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களாக சென்ற இந்திய அணி இப்படி இந்த தொடரை சமன் செய்தது பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக துருவ் ஜுரேல் விளையாடியிருந்தார்.
அப்படி மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் இந்த போட்டியில் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் முதல் இந்திய வீரராக ஒரு தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதோடு அவர் ஒரு ராசியான வீரர் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் துருவ் ஜுரேல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான துருவ் ஜுரேல் இதுவரை இந்திய அணிக்காக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வேளையில் அந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த எல்டின் பாப்டிஸ் என்பவர் தான் விளையாடிய முதல் 10 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகளவில் சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
இதையும் படிங்க : எல்லா நேரமும் முடியாது.. சுதர்சனை கழற்றி விட்றாதீங்க.. இந்தியா செஞ்சது வெற்றிக்கு குறைவில்ல.. புஜாரா ஆதரவு
இந்த இங்கிலாந்து தொடரில் மாற்று விக்கெட் கீப்பாராக இடம் பிடித்திருந்த துருவ் ஜுரேல் அவ்வப்போது ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்த வேளையில் ஐந்தாவது போட்டியில் பண்டுக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது இந்த செயல்பாடு காரணமாக இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக அவர் இந்திய அணியுடன் பயணிப்பார் என்பது உறுதி.



