எல்லா நேரமும் முடியாது.. சுதர்சனை கழற்றி விட்றாதீங்க.. இந்தியா செஞ்சது வெற்றிக்கு குறைவில்ல.. புஜாரா ஆதரவு

C Pujara
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது.

முன்னதாக அந்தத் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகி முதல் போட்டியில் 0, 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் அறிமுகப் போட்டியுடன் அவரை கழற்றி விட்ட இந்திய அணி கருண் நாயருக்கு 3வது இடத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் அவரும் சொதப்பியதால் மீண்டும் வாய்ப்பு பெற்ற சுதர்சன் 4வது போட்டியில் 61 ரன்கள் அடித்து அசத்தினார்.

- Advertisement -

கழற்றி விடாதீங்க:

அதே போல கடைசிப் போட்டியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற கருண் நாயர் 8 வருடங்கள் கழித்து அரை சதத்தை அடித்தார். ஆனால் அந்த இருவருமே நம்பிக்கை தரும் வகையில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் அடுத்த டெஸ்ட் தொடரில் அந்த இருவருக்குமே உறுதியான வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் இது போன்ற கடினமான தொடரில் எல்லா நேரமும் அனைத்து பேட்ஸ்மேன்களாலும் சதத்தை அடிக்க முடியாது என்று புஜாரா தெரிவித்துள்ளார். எனவே சுதர்சன் போன்ற திறமையுடைய இளம் வீரரை கழற்றி விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இளம் வீரர்கள் முதிர்ச்சியடைவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும்”

- Advertisement -

புஜாரா ஆதரவு:

“சாய் சுதர்சன் இத்தொடரில் ஒரு முறை தன்னுடைய திறமையைக் காண்பித்துள்ளார். கருண் நாயரும் செயல்பட்டுள்ளார். எனவே அவர்கள் இந்த அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேறுவார்கள். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு முறையும் சதம் அல்லது 2 சதங்கள் அடிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு நேரம் தேவை”

புஜாரா ஆதரவு: தோத்தா ரசிகர்கள் மீம்ஸ் போட்டே வீட்டுக்கு அனுப்பிருப்பாங்க.. ஆனா கம்பீரின் அந்த முடிவு சூப்பர் தான்.. கைப் பாராட்டு

“ஏனெனில் இது மிகவும் கடினமான தொடர். 2 – 2 என சமன் செய்தது அனைத்து வீரர்களின் பங்களிப்பை காட்டுகிறது. எனவே வருங்காலங்களில் இந்த இளம் இந்திய அணி சிறப்பாக செயல்படும். இத்தொடர் டிராவில் முடிந்ததாக நாம் பேசுகிறோம். ஆனால் நாம் நிறைய செஷன்களை வென்றோம். எனவே என்னைப் பொறுத்த வரை இந்திய அணிக்கு இது வெற்றிக்கு கொஞ்சமும் குறைந்தது கிடையாது. இளம் வீரர்கள் விளையாடிய விதத்திற்கு இந்திய அணி சரியானவர்களின் கைகளிலேயே இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement