
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் அறிமுகமாகி நட்சத்திர வீரர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான துருவ் ஜுரேல் தற்போது இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமான அவர் நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதேவேளையில் 24 வயதான அவர் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பார்க்கப்படுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலை கொடுத்து வாங்கப்பட்ட அவர் இம்பேக்ட் வீரராக அணிக்குள் வந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு கிடைத்த முதல் ஐபிஎல் சம்பளத்தில் துருவ் ஜுரேல் என்ன செய்துள்ளார்? என்பது குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ராணுவ வீரரின் மகனான இவர் சிறுவயதிலிருந்து கிரிக்கெட்டின் மீதுள்ள ஆர்வத்தினால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
ஒருமுறை தன்னிடம் முறையான கிரிக்கெட் உபகரணங்கள் இல்லை என்பதற்காக தனது குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்ட அவர் வீட்டின் அறையை மூடிக்கொண்டு உள்ளேயே இருந்திருக்கிறார். அப்போது அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக துருவ் ஜுரேலின் தாய் தனது கழுத்தில் அணிந்திருந்த ஒரு தங்க செயினை விற்று அவருக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.
அப்படி தனது ஆசைக்காக கரியரின் ஆரம்பத்தில் தங்க செயினை வைத்து உபகரணங்களை வாங்கி கொடுத்த தாய்க்கு ஐபிஎல் தொடரில் தான் ஏலம் எடுக்கப்பட்டதும் அவருக்கு தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : எனக்கா மெயின் டீம்ல சேன்ஸ் இல்ல.. இந்திய ஏ அணிக்காக விளையாடி மெயின் டீமை பொளந்த – சர்பராஸ் கான்
ஐ.பி.எல் தொடரில் கிடைத்த அந்த பணத்தில் முதலில் தனது தந்தையின் கடனை அடைத்ததோடு எஞ்சியுள்ள அனைத்து பணத்திற்கும் நகைகளை வாங்கி அவரது தாய்க்கு பரிசு கொடுத்துள்ளார். அவரது இந்த செயல் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.