- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியின் 20 வருட சாதனையை சமன் செய்த துருவ் ஜுரேல்.. கவாஸ்கரின் கணிப்பை உண்மையாக்கி அசத்தல்

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ரவுண்ட் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூருவில் துவங்கிய போட்டியில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதிகபட்சமாக முசீர் கான் சதமடித்து 181, நவ்தீப் சைனி 56 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி மிகவும் சுமாராக பேட்டிங் செய்து 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மயங் அகர்வால் 36, கேஎல் ராகுல் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி, முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

தோனிக்கு சமமாக:

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61, சர்பராஸ் கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த இன்னிங்ஸில் இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் 7 கேட்ச்களை பிடித்தார்.

குறிப்பாக ஜெய்ஸ்வால், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், முசீர் கான், சர்பராஸ் கான், நித்திஷ் ரெட்டி, சாய் கிஷோர், நவ்தீப் சைனி ஆகியோர் கொடுத்த கேட்ச்களை விக்கெட் கீப்பராக அவர் கச்சிதமாக பிடித்தார். இதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை துருவ் ஜுரேல் படைத்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கரின் கணிப்பு:

இதற்கு முன் கடந்த 2004 – 05 துலீப் கோப்பையில் மத்திய மண்டல அணிக்கு எதிரான போட்டியில் வடக்கு மண்டல அணிக்காக எம்.எஸ். தோனியும் ஒரு இன்னிங்ஸில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்திருந்தார். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான துருவ் ஜுரேல் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் அரை சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க: இந்த நேரத்தில் இந்த முடிவை எடுப்பது சரியானது என்று நினைக்கிறன்.. ஓய்வை அறிவித்த சி.எஸ்.கே வீரர்

அப்போது எம்.எஸ். தோனியை போல் வருங்காலத்தில் துருவ் ஜுரேல் அசத்துவார் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய கணிப்பை உண்மையாக்கும் வகையில் துருவ் ஜுரேல் சாதனை படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து 275 ரன்களை துரத்தும் இந்தியா ஏ அணி சற்று முன் வரை 106-6 ரன்கள் எடுத்து தடுமாற்றமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -