இதை மட்டும் பண்ணா இந்த வருஷம் உங்களுக்கு தான் கப்.. ஓய்வறையில் சந்தித்த விராட் கோலிக்கு தோனி அட்வைஸ்

Kohli
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது.

அதோடு இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது அந்த அணியின் ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளது. இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் அந்த போட்டி குறித்த கருத்துக்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

- Advertisement -

அந்த அளவிற்கு மிகவும் சுவாரசியமாக நடைபெற்று முடிந்த இந்த போட்டி பற்றியே பலரும் பேசி வருகின்றனர். அதோடு தோனி விளையாடிய கடைசி போட்டி அது தான் என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த போட்டி முடிந்து பெங்களூரு அணி வீரர்களுக்கு கை கொடுக்காமல் ஓய்வறைக்கு சென்ற தோனியை கவனித்த பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நேரடியாக ஓய்வறைக்கு சென்று அவரிடம் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஓய்வறைக்கு சென்ற விராத் கோலியிடம் சில நிமிடங்கள் தோனி அட்வைஸ் வழங்கியதாகவும் தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் அப்படி என்னதான் தோனி விராட் கோலியிடம் பேசினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : எப்படியாவது இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வென்று விட்டு வாருங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என விராட் கோலியிடம் தோனி நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 10 நாள் காத்திருந்து அடிச்சோம்.. ஆர்சிபி அணியை பாத்து நாங்களும் முடிவு பண்ணிட்டோம்.. வெங்கடேஷ் பேட்டி

அதே போன்று இந்த சீசனில் பெங்களூரு அணி கொடுத்த கம் பேக் மிகச்சிறப்பான ஒன்று. இதே போன்ற உத்வேகத்தை இன்னும் ஒரு சில போட்டிகளில் வெளிப்படுத்தினால் நிச்சயம் கோப்பை உங்களுக்கு தான் என்றும் தோனி கூறியுள்ளார். அவரது இந்த வார்த்தைகள் குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement