கவலைப்படாதீங்க முதல் போட்டியிலே தோனி கர்ஜிப்பார். பர்ஸ்ட் மேட்ச் இவங்க கூட தானாம் – விவரம் இதோ

CSKdhoni

நான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து இத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

இந்த தருணத்தில் வைரசின் தாக்கம் குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தொடரை நடத்தி தருவதாக பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஐபிஎல் தொடரை நடத்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐசிசி அந்த உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்தது இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்தது.

ipl

அதன்படி ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கூறுகையில்… முழு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 60 போட்டிகளையும் அங்கு நடத்திவிடலாம் என்று யோசித்து முடிவுசெய்துள்ளோம். இத்தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அங்கு நடத்தினால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கமுடியும்.

- Advertisement -

முறையான அட்டவணை ? போட்டிகளின் விதிமுறை ? வீரர்களை எப்படி பாதுகாப்பது ? போட்டிகளுக்கான அட்டவணை என்ன என்பது குறித்த இன்னும் தெளிவான தகவல்கள் 7 நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று கூறியிருந்தார் பிரிஜேஷ் படெல். இந்தத்தொடருக்காக அனைத்து அணிகளும் வரும் 20 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் பயணிக்க இருக்கிறது.

CskvsMi

இந்நிலையில் தற்போது வெளியான அதிகாரபூர்வ தகவலின்படி ஐ.பி.எல் 2020 சீசன் : செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது. மேலும் இறுதிப்போட்டி மட்டும் 10 தேதியில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்ததொடரின் முதல் போட்டியாக சென்ற ஆண்டு இறுதிப்போட்டியில் ஆடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் இடையேதான் நடைபெறப்போகிறது. இந்த முதல் போட்டியே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி விளையாட இருக்கும் முதல் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.