கிரிக்கெட்டை விட்டு டென்னிஸ் விளையாட போகும் எம்எஸ் தோனி – வெளியான அதிகாரபூர்வ தகவல்

Dhoni-2

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இதுவரை விளையாடவில்லை. மேலும் தென் ஆப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் அடுத்து தற்போது பங்களாதேஷ் தொடர் என்ன சில தொடர்களில் தோனி நிராகரிக்கப்பட்டும் வருகிறார்.

Dhoni

இந்நிலையில் அவர் எப்போது கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்ற தகவல் இல்லாமல் கவலையில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு தற்போது தோனி கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆம் தோனி டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறாராம்.

இதற்காக அவர் டென்னிஸ் கோர்ட்டில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற கிரிக்கெட் கிளப் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் உள்ளூர் வீரருடன் இணைந்து 6-3 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த வருடம் நடைபெற உள்ள கிரிக்கெட் கிளப் டென்னிஸ் தொடரில் விளையாட இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni 1

தோனிக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என்ற நிலையில் பலமுறை தோனி கால்பந்து விளையாடி நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். ஆனால் தோனிக்கு டென்னிஸ் விளையாடவும் தெரியும் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.

- Advertisement -