இந்த 2 மாதம் முழுவதும் இந்த பணியை மட்டும் செய்ய போகிறேன் – தோனி எடுத்த அதிரடி முடிவு

MSdhoni
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி பிறகு தோனியின் ஓய்வு பற்றிய பேச்சு முக்கியமாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து அவரது ஓய்வு குறித்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெற மாட்டார் என்று பிசிசிஐ கூறிவந்த நிலையில் தானே முன்வந்து தோனி இரண்டு மாத ஓய்வினை பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார். அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதனால் தோனி தற்போது 2 மாதம் இந்திய அணியில் இருந்து விலகி உள்ளது உறுதியாகியுள்ளது.

தோனியின் இந்த இரண்டு மாத திட்டம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை இந்த இரண்டு மாதங்கள் பாராமிலிட்டரி உடன் பணியாற்றவே இந்த தொடரில் விலகி உள்ளார். தோனியின் இந்த முடிவு குறித்து தேர்வு குழுவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் தெரிவிக்கப்படும்.

dhoni

மேலும் 2011ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ பதவி பெற்ற தோனி 2015ஆம் ஆண்டு சிறிய பயிற்சியை மேற்கொண்டார். இதற்கு அடுத்து தற்போது இந்த இரண்டு மாதம் முழுநேரமாக பாராமிலிட்டரி பிரிவுடன் பணியாற்ற உள்ளதன் மூலம் தனது நாட்டுப் பற்றை மீண்டும் தோனி நிரூபிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தோனி விரைவில் ஓய்வினை அறிவித்து இந்திய ராணுவத்தில் பணியாற்றவும் வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement