- Advertisement -
ஐ.பி.எல்

எனக்கு கடைசி போட்டினு ஒன்னு இருந்தா அது சென்னை சேப்பாக்கத்துல தான் – நெகிழவைத்த தல தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து எப்போது அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி இருந்து வருகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றினால் நிச்சயம் தோனி ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவரது வாயாலேயே தற்போது உறுதியாகியுள்ளது.

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள சென்னை அணியானது இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா சிமெண்ட்ஸ்-இன் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தோனி அடுத்த வருடம் தான் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் இணையவழி உரையாடல் மூலம் பல கேள்விகளுக்கு பதில் அளித்த தோனி சுவாரசியமான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இந்தியா சிமெண்ட்ஸ்-இன் டீலர் ஒருவர் நீங்கள் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபேர்வெல் மேட்ச் ஏன் விளையாடவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தோனி : நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சொல்ல சுதந்திர தினத்தை விட வேறு சிறந்த நாள் இல்லை என்பதனாலேயே நான் அதனை செய்தேன்.

Dhoni Captain

மேலும் எனக்கான கடைசி போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டி என்னுடைய ஃபேர்வெல் போட்டியாக அமைய வாய்ப்பு உள்ளது. அதை விட சிறப்பான தருணம் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? என்னுடைய கடைசி போட்டி சேப்பாக்கத்தில் தான் என பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் மூலம் நிச்சயம் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதேபோன்று கட்டாயம் அவர் சேப்பாக்கத்தில் ரசிகர்களின் முன்னிலையில் தான் ஓய்வு பெறுவேன் என்று தெளிவாக கூறி உள்ளதால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமாயின் பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் விடை பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய தோனி : என்னுடைய கடைசி போட்டி சேப்பாக்கத்தில் இருக்கும் போது ரசிகர்கள் நேரில் வந்து என்னை வழியனுப்ப வேண்டும். மேலும் நானும் எனது ரசிகர்கள் அனைவரையும் சந்திப்பேன் என்று உருக்கமாகப் பேசி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

அவரின் இந்த வார்த்தைகள் தற்போது தோனியின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தோனி சென்னை சேப்பாக்கத்தில் ஃபேர்வெல் மேட்ச் விளையாடும்போது நிச்சயம் அரங்கம் அதிர அவர் விடை பெறுவார் என்பது மட்டும் உறுதி.

- Advertisement -
Published by