சி.எஸ்.கே என்னை தக்கவைக்க வேண்டாம். என்னை ஏலத்தில் விடுங்கள் – தோனி கோரிக்கை

msdhoni

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 13வது சீசனாக அடுத்த ஆண்டும் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான வீரர்கள் மாற்றம் மற்றும் வீரர்களின் ஏலம் தற்போது நடைபெறவுள்ளது.

Dhoni

தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நீடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் தன்னை 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது தக்க வைக்க வேண்டாம் என்றும் ஏலத்தில் விடவும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

அதன்படி இந்த முடிவை எடுக்க காரணம் யாதெனில் தனக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக தொகையை செலவு செய்து வருகிறது. சிஎஸ்கே அணிக்காக தோனி ஒரு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் பெற்று வருகிறார். அதனால் 2021 ஆம் ஆண்டு தன்னை ஏலத்தில் விட்டு குறைந்த தொகையில் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு அணிக்கு திரும்பும் எண்ணம் உள்ளதற்காகவே தோனி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

dhoni

ஏனெனில் இவ்வளவு பெரிய தொகையை தனக்காக செலவு செய்வதால் அணியின் வீரர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் சில கோடிகள் குறைவாக தனக்கு கொடுத்தால் அணியில் இளம் வீரர்கள் பலரை வாங்க முடியும் என்று தோனி நினைத்துள்ளார். இதன்காரணமாக தோனி தன்னை ஏலத்தில் விட சொல்லி நினைத்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

Dhoni

தோனி தன்னை அணியில் இருந்து விடுவிக்க கூறினாலும் அவரை விடுவிக்கும் எண்ணம் சிஎஸ்கே நிர்வாகத்திடம் இல்லை என்பது உண்மை. தோனியும் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பது அவரது நினைப்பு மட்டுமின்றி அணி நிர்வாகத்தின் முடிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.