MS Dhoni : ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் தோனி அணியவுள்ள கிளவுஸ் இதுதான் – விவரம் உள்ளே

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி வழக்கமாக விக்கெட் கீப்பிங் செய்யும் கிளவுஸை பயன்படுத்தாமல் இந்திய பாராமிலிட்டரியின் சிறப்புப்

dhonii
- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி வழக்கமாக விக்கெட் கீப்பிங் செய்யும் கிளவுஸை பயன்படுத்தாமல் இந்திய பாராமிலிட்டரியின் சிறப்புப் படையின் முத்திரையான பாலிதான் சின்னத்தை பதித்து தனது விக்கெட் கீப்பிங் கிளவுசை பயன்படுத்தினார்.

dhoni

- Advertisement -

இதனை கவனித்த ஐசிசி தோனிக்கு இனிமேல் அது போன்ற கிளவுஸை சர்வதேச போட்டிகளில் அணிந்து விளையாட கூடாது என்று அறிவுரை செய்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு நாட்டு வீரரும் அவர்களது நாட்டைச் சார்ந்த மதம், அரசியல் மற்றும் சமூகம் போன்றவற்றை குறிக்கும் குறியீடுகளை போட்டியின் போது உபயோகிக்கும் பொருட்களில் பயன்படுத்த கூடாது என்றும் பி.சி.சி ஐ கவனத்திற்கும் கொண்டு சென்றது.

ஐசிசியின் கோரிக்கை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தோனிக்கு இது போன்ற கிளவுஸ்களை அணிய வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தோனியும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் வேண்டுகோளை மதித்து இன்றைய போட்டியில் மாற்று கிளவுஸ்களை பயன்படுத்த உள்ளார்.

நேற்றைய பயிற்சி போட்டியின்போது தோனி பச்சை நிறத்தில் எந்த முத்திரையும் இல்லாமல் சாதாரணமான கிளவுஸ் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார். எனவே இன்றைய போட்டியிலும் அதே கிளவுஸ் அணிந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்குவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement