- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனது செல்ல மகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் தல தோனி. இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் இதோ

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைக்காத தோனி தற்போது தனது மகளுடன் நீச்சல்குளத்தில் அவருடைய மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்திய அளவில் தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவருடைய மகளுக்கும் ரசிகர் பட்டாளம் தனியாக உள்ளது. தோனியின் மகள் செய்யும் ஒவ்வொரு சின்ன விடயங்களும் இணையத்தில் அவ்வப்போது ஹிட்டடிக்க தவறியதில்லை. அந்த வகையில் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by