MS Dhoni : டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் எங்களிடம் உள்ள இந்த பலத்தாலே வெற்றி பெற்றோம் – தோனி

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர்

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Watson

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறியதாவது : இதுவே சென்னை அணியின் வழக்கமான பாதை சென்ற ஆண்டும் இதுபோன்ற போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக ஆடியது. இந்தப் போட்டியிலும் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள் இந்த போட்டியில் சென்னை அணி வீரர்கள் சில ரன்களை விட்டாலும், கேட்சிகளை தவறவிட்டாலும் அதிலிருந்து சிறப்பாக திரும்பி வந்தனர் நாங்கள் எளிய இலக்கினை துரத்தியதாகவே நினைக்கிறேன்.

Bravo

இந்த வெற்றியின் முக்கிய காரணம் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் தான். டெல்லி அணி வீரர்களை அதிக ரன்கள் அடிக்க விடாமல் பவுலர்கள் கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் கை கொடுத்தது. பல பலம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் டெல்லி அணியின் துவக்க வீரர்களை விரைவில் வீழ்த்தியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று தோனி கூறினார்.

Advertisement