சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – தோனி மகிழ்ச்சி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான தன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

cskvssrh

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் குவித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய சாம் கரன் 31 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை குவித்தார். ஜடேஜா பேட்டிங்கில் 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 3 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Jadeja

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்த போட்டியில் இரண்டு புள்ளிகள் கிடைத்தது அது மட்டுமே இப்போது முக்கியம். டி20 போட்டிகளில் என்னென்ன நடக்கும் என்பதை கடந்த சில போட்டிகளாக பார்த்து வந்தோம். சில போட்டிகள் நமக்கு சரியாக செல்லவில்லை என்றால் அதிலிருந்து நாம் நிறைய விடயங்களை கற்று கொள்ள வேண்டும். இன்றைய போட்டியில் அனைவரும் சிறப்பாகவே தங்களது பணியைச் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தை நன்கு கணித்து விளையாடினர். 160 ரன்கள் எடுத்தால் இந்த மைதானத்தில் எதிரணியை வீழ்த்த முடியும் என்று நினைத்தோம். அதேபோன்று பௌலிங் செய்யும்போது முதல் ஆறு அவர் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்று பாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோன்று ஸ்பின்னரும் இந்த போட்டியில் சிறப்பாக பங்களித்தனர். நாங்கள் அடித்த ஸ்கோர் இந்த மைதானத்தில் போதுமானது என்று நினைத்தோம்.

csk 1

பீல்டிங்கில் மிஸ்டேக் செய்திருந்தால் அது மாறி இருக்கலாம் ஆனால் இன்று நான் பாஸ்ட் பவுலர்களிடம் சரியான விதத்தில் பந்துவீசும் படியும், பீல்டிங்கில் முழு உத்வேகத்துடன் இருக்குமாறும் தெரிவித்திருந்தேன். அதேபோன்று அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியை அப்படியே தொடர விரும்புவதாகவும், இன்னும் நாங்கள் சில தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement