ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..
17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் போட்டி முடித்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சிறிய விஷயங்களை கூட சரியாக செய்தோம். மேலும் எங்களது ஆட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த போட்டியில் வெளிப்பட்டது. இன்றைய போட்டியில் இருந்த துவக்கத்தை போன்று ஒரு துவக்கத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த இடத்தில் அனுபவம் வெளிப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியனர் என்று சொல்வதை விட அனுபவத்துடன் விளையாடினார்கள். வாட்சன் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதனை இப்போட்டியில் வெளிக்கொண்டு வந்துள்ளார். மேலும் சிறிது நேரம் எடுத்து ஆடினால் அவரது ஆட்டம் எப்போதும் சிறப்பாகவே இருக்கும். அதே போன்று டு பிளசிஸ் சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றிக்கு அவர்கள் இருவருமே காரணம். இது ஒரு நல்ல விடயமாக மாறியுள்ளது.
இதன் பிறகு அணி தேர்வில் உள்ள விவாதங்கள் நிறைவுக்கு வரும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களது திட்டங்கள் பந்துவீச்சில் எவ்வாறு இருந்ததோ அதை சரியாக செய்து எதிரணியை அழுத்தத்தில் கொண்டு வந்தனர். இறுதியில் இது போட்டி ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.