CSK vs MI IPL 2021 : டாசை வென்ற பிறகு தல தோனி சொன்ன விடயங்கள் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

dhoni 1
- Advertisement -

14-வது ஐபிஎல் தொடரின் 30-வது போட்டி துபாய் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை அணியும் மோதி வருகின்றன. ரோகித் சர்மா விளையாடும் அளவிற்கு பிட்டாக இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக இந்த போட்டியில் பொல்லார்டு கேப்டனாக செயல்படுகிறார்.

cskvsmi

- Advertisement -

டாசை வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் இப்போட்டி குறித்து பேசிய தோனி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த ஆடுகளம் ரன் குவிப்பு ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன். இந்த சீசன் முற்றிலும் புதுமையாக உள்ளது.

ஏழு ஆட்டங்களுக்கு பிறகு ஒரு பிரேக் அதன் பின்னர் தற்போது மீண்டும் ஆட்டங்கள் துவங்கியுள்ளது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நமது செயல்பாடு எவ்வாறு அமைகிறதோ அதைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். அந்த வகையில் இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு முக்கியமான ஒன்று.

Ruturaj

டூபிளெஸ்ஸிஸ், பிராவோ, மொயின் அலி, ஹேசல்வுட் ஆகியோர் இந்த போட்டியில் விளையாடுகின்றனர் என தெரிவித்தார். தோனி கூறியது போலவே இந்த ஆடுகளம் முதலில் மந்தமாக இருந்தாலும் பின்னர் பேட்டிங்கிற்கு கைகொடுத்தது.

சென்னை அணி ஆரம்பத்தில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இருப்பினும் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான ஆட்டம் காரணமாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. 58 பந்துகளை சந்தித்த அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 4 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement