சென்னை அணியில் நான் செய்துள்ள இந்த மாற்றங்களுக்கான காரணம் இதுதான் – தோனி வெளிப்படை

Dhoni-1

புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான போட்டி இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் தோல்வியடைந்து, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஹைதராபாத் அணிக்கும் இதே நிலைமை தான்.

cskvssrh

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 12 முறை ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறது.மொத்தம் ஒன்பது முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஹைதராபாத் அணி 3 முறை மட்டுமே வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது துபாய் மைதானத்தில் இன்னும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக தனது முடிவை அறிவித்தார்.

bravo

இந்த டாசுக்கு அடுத்து இந்தப் போட்டியில் சென்னை அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது குறித்து அணியின் கேப்டன் டோனி விளக்கினார். அதில் தொடர்ந்து சொதப்பி வரும் முரளி விஜய் மற்றும் கெய்க்வாட் ஆகியோரை அணியில் இருந்து வெளியேற்றி அவர்களுக்கு பதிலாக ராயுடு மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரை கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஹேசல்வுட்க்கு பதிலாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ சென்னை அணியில் விளையாடுகிறார் என்று பல மாற்றங்களை செய்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து பேசிய தோனி : விக்கெட்டை விரைவில் எடுப்போம் என நம்புகிறேன். எங்களுக்கு நீண்ட நேரம் கிடைத்ததால் முக்கிய சந்திப்புகளை இந்த நாட்களில் நடத்த முடிந்தது. மேலும் அணியின் பௌலிங் மற்றும் பேட்டிங் என தேவையான மாற்றங்களை செய்ய உதவியாக இருந்தது. ஒரு அணிக்கு பேட்டிங் என்பது மிக முக்கியமானது.

Dhoni

நீண்ட நேரம் விளையாடுவதும் அனுபவமும் போட்டியில் நன்றாக எடுபடும் என்று தோனி தெரிவித்துள்ளார். இந்த முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்துள்ளது. இதனால் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.