அவரது கண்ணுல பதில் தெரிஞ்சது. அதனாலே தான் ருதுராஜ் கெய்க்கவாட்டை விளையாடவைத்தேன் – தோனி பேட்டி

Dhoni

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரசல், தினேஷ் கார்த்திக் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரது அதிரடி காரணமாக இறுதிவரை போட்டி விறுவிறுப்பாக சென்று கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களை குவித்தார். அதேபோன்று இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த முறை சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த போட்டிக்கு முன்னர் இவரது மோசமான பார்ம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தோனி நேற்றைய போட்டியிலும் அவருக்கு வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய அவர் இந்த போட்டியில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய தோனி கூறுகையில் :

ruturaj

அவர் ஒரு கிளாஸ் வீரர் என்பதை கடந்த ஆண்டே நிரூபித்தார். எப்போதும் ஒரு வீரரின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். அதன்படி போட்டிக்கு முன்பாக நான் அவரிடம் சென்று இன்று எவ்வாறு இருக்கிறாய் ? இன்று எப்படி நீ உணருகிறாய் என்று கேட்டேன் அப்போது அவருடைய கண்களையும் பார்த்தேன்.

- Advertisement -

ruturaj

அதில் எந்தவித பயமும் இல்லை, சலனமும் இல்லை அவர் கண்களிலே அவர் உறுதியான மனநிலையுடன் இருப்பதை அறிந்தேன். அவருடைய இந்த ரியாக்சன் பார்த்தபின்பு எனக்கு நம்பிக்கை வந்தது. இதைத்தான் நான் எப்போதும் செய்து வருகிறேன். இதன் காரணமாகவே நான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.