முதல் போட்டியிலே 15-20 ரன் மட்டும் அடிச்சிருந்தா இவர் எப்பவுமே டீம்ல ஆடியிருப்பாரு – தோனி வெளிப்படை

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தோனி ருத்ராஜ் கெய்க்வாட் குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நான் எப்பொழுது அவரை பார்க்கும் போதும் அவர் சிறப்பாகவே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த தொடரை அவர் சிறப்பாக துவங்கி உள்ளதாக கருதுகிறேன். கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் இருபது நாட்கள் கஷ்டப்பட்டார். அதன் பிறகு அவர் முழு உடல் தகுதியுடன் இருக்க முடியவில்லை.

- Advertisement -

மேலும் அதிக அளவு அவர் பயிற்சியிலும் ஈடுபடவில்லை. அதனாலேயே துவக்கத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. முன்கூட்டியே முதல் போட்டியில் அவர் 15 முதல் 20 ரன்கள் வரை முதல் போட்டியில் அடித்து இருந்தால் ஒரு பார்வை அவர் மீது இருந்திருக்கும். அதுமட்டுமின்றி நாங்கள் வாட்சன் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோரது துவக்கத்தை உடைக்கக் கூடாது என்றும் இருந்தோம்.

Ruturaj

அதனால் முதலில் சில போட்டிகளுக்கு அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் கடைசி சில போட்டிகளாக துவக்க வீரராக அவர் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக செயல்படுவார் என்று தான் நினைப்பதாகவும் தோனி கூறியுள்ளார்.

Advertisement