ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க காரணம் இதுதான் – தோனி கொடுத்த விளக்கம்

ruturaj
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது சென்னை அணிக்காக அறிமுகமான ருத்ராஜ் கெய்க்வாட். தனது முதல் போட்டியில் முதல் பந்தை சந்தித்த ருத்துராஜ் அந்த பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் சரியாக ஆடாத காரணத்தால் தொடரின் இறுதி ஆட்டங்களில் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ஓப்பனிங்கில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது.

Ruturaj

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ருத்துராஜ் கெயக்வாட் கடைசி மூன்று ஆட்டங்களில் 3 அரை சதங்களை விளாசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அந்த 3 ஆட்டங்களிலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் சரியாக ஆடவில்லை.

- Advertisement -

முதல் போட்டியில் 8 பந்துகளுக்கு 5 ரன்களும், இரண்டாவது போட்டியில் 16 பந்துகளில் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார் ருத்துராஜ் கெயக்வாட். இதற்கிடையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 13 பந்துகளை எதிர்கொண்ட ருத்துராஜ் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ruturaj 1

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்பு பேசிய சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு ஏன் தொடர்ந்து வாய்பளிக்கிறோம் என்பதைப் பற்றி கூறியிருக்கிறார், அதில் அவர் கூறியதாவது :

Ruturaj-3

ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த இளம் வீரர். கடந்த தொடரிலேயே அவருடைய திறமையை நிரூபித்து விட்டார். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் ஏமாற்றம் அளித்தாலும், விளையாடுவதற்கு கடினமான பந்துகளிலேயே அவர் தனது விக்கெட்டை பரிகொடுத்தார். அதனால் அவரை குறை சொல்ல இயலாது. இனிவரும் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

Advertisement