MS Dhoni : நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை – தோனி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Ragul

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தோனி கூறியதாவது : இந்த மைதானத்தில் விளையாடுவது என்பது எளிமையானது கிடையாது. பஞ்சாப் அணி வீரர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். 3 ஸ்பின்னர்கள் இருக்கும்போது விளையாடுவது எளிதானது கிடையாது. ஆனால், ராகுல், கெயில் மற்றும் பூரான் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள்.

Rahul

உண்மையிலே பஞ்சாப் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம் ஆனாலும் எங்களால் போட்டியை ஜெயிக்க முடியவில்லை. இருப்பினும், எங்களது அணி வீரர்கள் சிறப்பாகவே பந்துவீசினார்கள் என்று தோனி கூறினார்.

Advertisement