நாங்க நெறைய தப்பு பண்ணிட்டோம். கடந்த 4-5 போட்டிகளாக தான் எல்லாம் புரிஞ்சிச்சி – வெற்றி குறித்து வெளிப்படையாக பேசிய தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

ngidi

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : நாங்கள் இந்த தொடரில் முழு திறனுடன் விளையாடவில்லை. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் நிறைய தவறுகளைச் செய்து உள்ளோம். ஆனால் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் நாங்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை புரிந்து அதனை வெளிப்படுத்தினோம். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 4 போட்டிகளாக நாங்கள் விளையாடிய கிரிக்கெட் திருப்தி அளிக்கிறது. இருப்பினும் 6-7 தோல்விகளுக்குப் பிறகு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நாங்கள் விளையாடுவது கடினம். எங்கள் ஓய்வு அறையும் மகிழ்ச்சியாக அமையவில்லை. அது அணிக்கு சிக்கலான சூழலை விளைவித்தது. இருப்பினும் நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளோம். அடுத்து ஆண்டு சிஎஸ்கே அணியை மொத்தமாக மாற்றி ஆக வேண்டும்.

gaikwad

ஏனெனில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையான ஒரு அணியை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுத்தாக வேண்டும். ஐபிஎல் துவங்கியபோது நாங்கள் சிறந்த ஒரு அணியை எடுத்து இத்தனை ஆண்டுகள் பயணித்தோம். அதே போன்று இனிவரும் அடுத்த தலைமுறைக்கு ஒரு வலுவான அணியை நிச்சயம் கொடுக்க வேண்டும். அதனால் அணியில் மாற்றங்களை செய்து அதை வழங்குவேன் என தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement