தமிழக வீரர் ஜெகதீசனை களமிறக்காதது ஏன் ? இது மட்டும் தான் காரணம் – தோனி வெளிப்படை

Dhoni

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான தன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

cskvssrh

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் குவித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய சாம் கரன் 31 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை குவித்தார். ஜடேஜா பேட்டிங்கில் 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 3 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி ஜெகதீசன் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பது குறித்தும் தனது கருத்தினை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் கூடுதலாக ஒரு பவுலருடன் களமிறங்க நினைத்தோம். அதனால் ஜெகதீசனுக்கு அணியில் கொடுக்க முடியாமல் போனது.

- Advertisement -

Jagadeesan

மேலும் ஜெகதீசன் ஏழாவது, எட்டாவது வரிசையில் பேட்டிங் இறங்குவதை விட அவருக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரை அதிகமாக சேர்க்க முடிவு செய்ததால் அவர் இன்றைய போட்டியில் விளையாட வில்லை என்று ஜெகதீசன் குறித்து தோனி கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் முதன் முறையாக களமிறங்கிய ஜெகதீசன் சிறப்பாக விளையாடி 30 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது.